வீடியோ : மகிழ்ச்சியை வெறித்தனமாக கொண்டாடிய போது – பரிதாபமான காயத்தை சந்தித்த 4 வீரர்கள்

David Warner Injury
- Advertisement -

பொதுவாகவே வாழ்க்கையில் தோல்வி சந்தித்தால் சோகமடைவதும் வெற்றியை சந்தித்தால் கொண்டாடுவதும் வழக்கமான நிலையில் கிரிக்கெட்டிலும் தங்களது அணிக்காக முழு திறமையை வெளிப்படுத்தி போராடும் வீரர்கள் வெற்றி பெறும் போது அதை வெறித்தனமாக கொண்டாடுவதற்கு தவறுவதில்லை. குறிப்பாக தற்போதெல்லாம் ஒரு பின்னணியை வைத்துக் கொண்டும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் நிறைய வீரர்கள் வித்தியாசமாக கொண்டாடுவது சகஜமாகி வருகிறது.

ஆனால் எதிலுமே நிதானம் அவசியம் என்ற நிலைமையில் தங்களை மறந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் வெறித்தனமாக கொண்டாடும் சில வீரர்கள் அந்த மகிழ்ச்சியிலேயே வித்தியாசமான காயத்தை சந்தித்துள்ளார்கள். அது போல கிரிக்கெட்டில் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியை வெறித்தனமாக கொண்டாடிய போது காயமடைந்த சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. ஹசன் அலி: கடந்த 2018ஆம் ஆண்டு ஜிம்பாப்வேப்புக்கு எதிராக நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ரியன் முர்ரே விக்கெட்டை எடுத்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி “என்னையா அடிக்கப் பார்க்கிறாய் நான் ஒரு வெடிகுண்டு” என்பது போல் வித்தியாசமான சைகை செய்து மகிழ்ச்சியை கொண்டாடினார்.

ஆனால் அதற்காக தன்னுடைய தோள்பட்டைகளை வெறித்தனமாக சுழற்றிய அவர் அதே காரணத்தால் கழுத்து பகுதியில் காயத்தை சந்தித்து அப்படியே மைதானத்தில் உட்கார்ந்தது ரசிகர்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தாமல் சிரிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பெரிய காயத்தை சந்திக்காத அவர் மருத்துவரின் முதலுதவியுடன் தொடர்ந்து விளையாடினார். ஆனால் அந்த போட்டி முழுவதும் கழுத்தைப் பிடித்துக் கொண்டே விளையாடிய அவரை இது தேவையா என ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

- Advertisement -

2. முஷ்பிகர் ரஹீம்: கடந்த 2022 வங்கதேச சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ககிஸோ ரபாடா எட்ஜ் கொடுத்த பந்தை விக்கெட் கீப்பர் மிஸ்பிகர் ரஹீம் கிட்டத்தட்ட தரையோடு தரையாக கேட்ச் பிடித்தார். ஆனால் கேட்ச் பிடிக்கும் போது எந்த காயத்தையும் சந்திக்காத அவர் அந்த விக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் பந்தை வானத்தை நோக்கி வெறித்தனமாக தூக்கி எறிந்து கொண்டாடினார்.

அப்போது மிகுந்த வேகத்துடன் தூக்கி எரிந்ததால் தோள்பட்டையில் காயத்தை சந்தித்த அவர் வேதனையில் தவித்தார். நல்ல வேளையாக முதலுதவிகளை எடுத்துக் கொண்டதுடன் பெரிய அளவில் காயத்தை சந்திக்காததால் மீண்டும் அவர் விளையாடிய போதிலும் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளனார்.

- Advertisement -

3. கேசவ் மகாராஜ்: கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு 1 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது அதை சுழல் பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் எடுத்தும் நடுவர் கொடுக்காததால் ரிவ்யூ எடுத்தார். அதை 3வது நடுவர் சோதித்த போது பெரிய திரையில் அவுட் என்பது தெளிவாக தெரிய வந்ததால் கேசவ் மகாராஜா துள்ளிக் குதித்து கொண்டாட துவங்கினார்.

ஆனால் அதற்காக தன்னுடைய காலை வெறித்தனமாக தரையில் பதித்த அவர் தசைப் பிடிப்பை சந்தித்ததால் அப்படியே மைதானத்தில் சுருண்டு நடக்க முடியாமல் தவித்தார். அதன் காரணமாக மருத்துவர்கள் உதவியுடன் பலகையில் தூக்கிச் செல்லப்பட்ட அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு சென்றதுடன் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையிலிருந்தும் வெளியேறினார்.

- Advertisement -

4. டேவிட் வார்னர்: கடந்த 2022 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் தன்னுடைய 100வது போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலியா வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க:ஆட்டமே இனிமேல் தான் இருக்கு, என்ன ஆனாலும் அதை மட்டும் கைவிட மாட்டோம் – ஆஸியை ஓப்பனாக எச்சரித்த இங்கிலாந்து

குறிப்பாக 2021க்குப்பின் சதமடிக்காமல் இருந்ததால் அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு மத்தியில் சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரட்டை சதமடித்த அவர் அந்த மகிழ்ச்சியை தமக்கே உரித்தான சூப்பர் மேன் ஸ்டைலில் காற்றில் பாய்ந்து துள்ளி குதித்துக் கொண்டாடினார். ஆனால் அப்படி வெறித்தனமாக கொண்டாடியதால் தசைப்பிடிப்பு காயத்தை சந்தித்த அவர் பரிதாபமாக ரசிகர்களின் கைதட்டல்களுக்கு மத்தியில் பெவிலியன் திரும்பினார்.

Advertisement