- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2023 ஏலம் : விஸ்வாசி ப்ராவோ இடத்தை நிரப்ப சென்னை வாங்க வேண்டிய 4 வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடை காலம் இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் மினி ஏலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 405 வீரர்கள் களமிறங்குகிறார்கள். அதில் தங்களுக்கு தேவையான கிரிக்கெட் வீரர்களை வாங்கிக்கொண்டு புதிய சீசனில் கோப்பை வெல்ல தயாராகும் அணிகளுக்கு மத்தியில் 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பை வெல்வதற்கு தீயாக வேலை செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத அந்த அணிக்கு கடந்த பல வருடங்களாக விஸ்வாசியாக செயல்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ட்வயன் ப்ராவோ ஓய்வு பெற்றது பெரிய இழப்பாகும்.

ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்து 2 ஊதா தொப்பிகளை வென்ற ஒரே வீரராக சாதனை படைத்த அவர் வயது காரணமாக ஓய்வு பெற்று பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இருப்பினும் இனிமேல் அவரால் களமிறங்கி வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது என்ற நிலைமையில் அவருக்கான சரியான மாற்று வீரரை இந்த ஏலத்தில் தேர்ந்தெடுக்க வேண்டியது சென்னை அணியின் முதல் வேலையாக பார்க்கப்படுகிறது. அதற்கு அந்த அணி வாங்க வேண்டிய சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. சாம் கரண்: 2019 ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தும் பஞ்சாப் நிர்வாகம் கழற்றி விட்ட இவரை 2020இல் 5.5 கோடிக்கு சென்னை நிர்வாகம் வாங்கியது. அதில் தமிழக ரசிகர்கள் சுட்டிக் குழந்தை என்றழைக்கும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் துரதிஷ்டவசமாக கடந்த வருடம் காயமடைந்து பாதியுடன் வெளியேறினார்.

அதன் பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பைனலில் ஆட்டநாயக்கன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் வென்று இங்கிலாந்து 2வது கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய அவருடைய மதிப்பு தற்போது தங்கமாய் எகிறியுள்ளது. குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அவரை பல கோடிகள் கொடுத்து வாங்குவதற்கு அனைத்து அணிகளும் தயாராகியுள்ளன. அந்த இடத்தில் 20 கோடியை மட்டும் கையிருப்பு வைத்துள்ள சென்னை அவரை வாங்குவது கடினம் என்றாலும் முடிந்தளவுக்கு முயற்சிக்க வேண்டியுள்ளது கட்டாயமாகிறது.

- Advertisement -

2. பென் ஸ்டோக்ஸ்: நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படும் இவர் இங்கிலாந்தின் 2019 உலகக் கோப்பை, 2022 டி20 உலக கோப்பை நாயகனாக போற்றப்படுகிறார். நல்ல தரமும் அனுபவமும் கொண்ட இவரையும் பல கோடிகள் கொடுத்து வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதால் எளிதாக சென்னை வாங்குவதில் சிக்கல் ஏற்படும்.

இருப்பினும் ப்ராவோ போன்ற அனுபவமிக்க ஆல் ரவுண்டரின் இடத்தை நிரப்ப இவரால் மட்டுமே முடியும் என்பதால் சென்னை நிச்சயமாக போராடி வாங்க வேண்டும். அத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ஜொலிக்கும் இவர் ஏற்கனவே 40 வயதை கடந்து விட்ட தோனிக்கு அடுத்தபடியாக வரும் காலங்களில் சென்னையை வழி நடத்தும் திறமையும் கொண்டவர் என்பதையும் நினைவில் வைத்து அந்த அணி செயல்பட வேண்டியுள்ளது.

- Advertisement -

3. ஜேசன் ஹோல்டர்: வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இவரும் 49 விக்கெட்டுகளையும் 327 ரன்களையும் ஐபிஎல் தொடரில் எடுத்த அனுபவம் கொண்டவர். கிட்டத்தட்ட ப்ராவோவை போலவே வலது கை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் நிச்சயமாக அவரது இடத்தை நிரப்பும் திறமை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக மற்ற அணிகளில் தடுமாறிய நிறைய வீரர்கள் சென்னை அணியில் அசத்தியது போல இவரும் அந்த அணிக்கு வந்தால் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

4. டேனியல் சாம்ஸ்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து ஆல்-ரவுண்டரான இவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஆரம்பகட்டங்களில் ரன்களை வாரி வழங்கினாலும் கடைசி நேரங்களில் அபாரமாக செயல்பட்டு மும்பை பதிவு செய்த 4 வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: IND vs BAN : 2வது டெஸ்ட் நடைபெறும் தாக்கா மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

இருப்பினும் அந்த அணி நிர்வாகம் கழட்டி விட்டுள்ள நிலையில் மேற்கண்ட வீரர்களை வாங்க தவறினாலும் 75 லட்சம் அடிப்படை விலையில் இவரை சென்னை எளிதாக வாங்கி விடலாம். ஏனெனில் பவுலிங் மட்டுமல்லாமல் டெத் ஓவர்களில் கடைசி நேரங்களில் அதிரடியாக ரன்களைக் குவித்து வெற்றியை பெற்றுக் கொடுக்கும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அசத்தும் திறமை இவரிடம் உள்ளது.

- Advertisement -
Published by