IND vs AUS : 2 தமிழக வீரர்கள் உட்பட 4 பேர் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இணைப்பு – வெளியான தகவல்

Washington-Sundar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் வீரர்களை ஏற்கனவே பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேளையில் தற்போது இந்திய அணியானது நாக்பூரில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

INDvsAUS

- Advertisement -

அதன்படி எதிர்வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூரில் துவங்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டி தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி வரும்.

இதன் காரணமாக இந்த டெஸ்ட் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமாகியுள்ளது. அந்த வகையில் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் இந்திய அணியானது வெற்றிக்கு சாதகமான இந்த இந்திய ஆடுகளங்களில் கூடுதல் ஸ்பின்னர்களுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

kishore

மேலும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஸ்பின்னர்களாக இடம் பெற்றுள்ள வேளையில் தற்போது மேலும் 4 ஸ்பின்னர்களை இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ நெட் பவுலர்களாக அணியில் இணைத்துள்ளது.

- Advertisement -

பயிற்சியின்போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இவர்கள் பந்து வீச உள்ளனர். அந்த வகையில் இந்திய அணியில் ராகுல் சாகர், சௌரவ் குமார் மற்றும் தமிழக வீரர்களான சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை கூடுதல் நெட் பவுலர்களாக இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் எப்போது துவங்கும் – எந்த சேனலில் பார்க்கலாம்?

நாக்பூரில் நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இவர்கள் நான்கு பேரும் இந்திய அணியுடன் இணைந்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச உள்ளனர். ஏற்கனவே இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக 4 ஸ்பின்னர்களை இணைத்து இந்திய அணி பயிற்சி செய்ய இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

Advertisement