IND vs AUS : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் எப்போது துவங்கும் – எந்த சேனலில் பார்க்கலாம்?

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்திய வேளையில் அடுத்ததாக பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எங்கு நடைபெறுகிறது? எந்த நேரத்தில் துவங்குகிறது? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்து தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் நகரில் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி துவங்குகிறது. அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டெல்லி மைதானத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி துவங்குகிறது.

starsport

இந்த இரண்டு போட்டிகளுக்குமான இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலா நகரில் மார்ச் 1-ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 9-ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.

- Advertisement -

இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளுமே இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கும். அதேபோன்று இந்த டெஸ்ட் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் நீங்கள் நேரலையாக கண்டு களிக்கலாம். அதுமட்டும் இன்றி ஆன்லைன் மூலமாக போட்டிகளை காண விரும்புவோர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மூலமும் இந்த தொடரை கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs AUS : அவர்கிட்ட தடவுனா உங்கள அவுட்டாக்கிடுவாரு, அதிரடியாக ஆடுங்க – விராட் கோலிக்கு சஞ்சய் பங்கர் ஆலோசனை

இந்த டெஸ்ட் தொடரின் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த டெஸ்ட் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement