ஒன்றல்ல.. இரண்டல்ல.. 4 பேருக்கு இடம்.. வெளியான ஐ.சி.சி யின் பவுலர்கள் தரவரிசை பட்டியல் – விவரம் இதோ

IND
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் முடிவில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் ஐசிசி-யின் 13வது ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற்று வரும் வேளையில் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலும் இன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக மாறிவரும் முகமது சிராஜ் தற்போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

இவ்வேளையில் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று இந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் நான்கு இந்திய வீரர்களுக்கு டாப் 10-ல் இடம் கிடைத்துள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகாராஜ் இரண்டாம் இடம் பிடித்துள்ள வேளையில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மூன்றாம் இடம் பிடித்துள்ளார், நான்காவது இடத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவுடன் செமி ஃபைனலில் அந்த டீம் மோதுவதற்கு வாய்ப்பு பிரகாசமாகிடுச்சு.. மைக்கேல் வாகன் கருத்து

இப்படி முதல் 5 இடத்திற்குள் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகியோர் இடம் பிடித்துள்ள வேளையில் இந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தில் பும்ராவும், பத்தாவது இடத்தில் முகமது ஷமியும் இடம் பெற்றுள்ளதால் முதல் 10 இடங்களுக்குள் நான்கு இந்திய பவுலர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement