ஐபிஎல் 2022 : மெகா ஏலத்தில் அதிக கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் 4 தகுதியான – இந்திய ஆல் ரவுண்டர்கள்

All
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 590 வீரர்கள் பங்கேற்க உள்ளதால் அவர்களில் எந்தெந்த வீரர்கள் தங்களுக்கு பிடித்த அணிகளில் விளையாட போகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ipl trophy

- Advertisement -

மற்ற வருடங்களை போல இந்த வருடமும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு சில தரமான வீரர்களை வாங்க அனைத்து அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சமீபத்தில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அசத்திய ஒருசில இளம் இந்திய வீரர்களும் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் ஆவார்கள் என நம்பப்படுகிறது.

இந்திய ஆல் ரவுண்டர்கள்:
அதேபோல் இந்த வருடம் பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் போன்ற ஒரு சில முக்கியமான வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்துள்ளார்கள். எனவே அவர்களுக்கு பதிலாக இந்தியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர்களை வாங்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ben-Stroke

ஏனெனில் வெளிநாட்டு வீரர்களை போல அல்லாமல் இவர்களின் அடிப்படை விலை மிகவும் குறைவாகும். அத்துடன் இவர்கள் இந்திய கால சூழ் நிலைகளில் பிறந்து வளர்ந்து அதற்கு ஏற்றார்போல் தங்களை உட்படுத்திக் கொண்டு விளையாடும் திறமையையும் கொண்டுள்ளார்கள். எனவே ஐபிஎல் 2022 ஏலத்தில் நல்ல விலைக்கு போகக்கூடிய சில இளம் இந்திய ஆல் ரவுண்டர் கள் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. வாஷிங்டன் சுந்தர் : தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த சீசன்களில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். தொட்டால் சிக்சர்கள் பறக்கக்கூடிய சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பவர்ப்ளே ஓவர்களில் பலமுறை அபாரமாக பந்துவீசிய இவர் பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுக்கும் வல்லமை பெற்றுள்ளார்.

Sundar-2

குறிப்பாக 2020 சீசனில் வெறும் 5.96 என மிகச் சிறப்பான எகனாமியில் பந்துவீசி அசத்தி இருந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக டாப் ஆர்டரில் விளையாடி வரும் இவர் கணிசமாக ரன்களை குவிக்கும் திறமையையும் பெற்றுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இவரை விரைவில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் நல்ல விலைக்கு வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என நம்பலாம்.

- Advertisement -

2. தீபக் ஹூடா: சமீப காலங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் இளம் வீரர் தீபக் ஹூடா கடந்த 2019 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட 50 லட்சத்துக்கு ஒப்பந்தமானார். அந்த அணிக்காக அனைத்துப் போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த தீபக் ஹூடாவுக்கு தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இவரையும் வரும் ஏலத்தில் வாங்க அனைத்து அணிகளும் நிச்சயமாக ஆர்வம் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

hooda

3. ஷிவம் துபே : பெங்களூரு அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு 5 கோடிகள் என்ற பெரிய தொகைக்கு விளையாட இளம் வீரர் சிவம் துபே ஒப்பந்தமானார். அந்த அணிக்காக 2 வருடங்கள் விளையாடிய அவருக்கு அதன்பின் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.

- Advertisement -

இருப்பினும் அதில் பெரிய அளவில் ஜொலிக்க தவறியதால் இந்திய மற்றும் பெங்களூர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அவர் கடந்த 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 4.40 கோடிகளுக்கு விளையாட ஒப்பந்தம் ஆனார். அந்த சீசனில் ஒரு சில போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் ஐபிஎல் 2022 ஏலத்தில் அதே போன்ற ஒரு நல்ல தொகைக்கு விலைபோவார் என எதிர்பார்க்கலாம்.

dube

4. க்ருனால் பாண்டியா: மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக வலம் வந்த பாண்டியா சகோதரர்களை அந்த அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. அதில் ஹர்திக் பாண்டியா அகமதாபாத் அணியின் கேப்டனாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் க்ருனால் பாண்டியா மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வெறும் 2 கோடிகளுக்கு மும்பை அணிக்காக விளையாட முதல் முறையாக அவர் ஒப்பந்தமானார். அதன்பின் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் அபாரமாக செயல்பட்டதால் தொடர்ச்சியாக அந்த அணியில் இடம்பிடித்த வந்த அவரை கடந்த 2018 மெகா ஏலத்தில் 8.80 கோடிகளுக்கு மீண்டும் மும்பை நிர்வாகம் தக்கவைத்தது. மொத்ததில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் இவரும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போக அதிக வாய்ப்புள்ளது.

krunal 1

இவர்கள் மட்டுமல்லாது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தீபக் சஹர், ஷார்துல் தாகூர் மற்றும் ஹர்ஷல் படேல் போன்ற இந்தியாவைச் சேர்ந்த பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement