திறமையால் ஆச்சர்யமாக திகழும் கிங் விராட் கோலியையே ஆச்சர்யப்படுத்திய 4 கிரிக்கெட் வீரர்கள் – வித்யாசமான பதிவு

Kohli
- Advertisement -

டெல்லியை சேர்ந்த விராட் கோலி கடந்த 2008இல் மலேசியாவில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்றதால் அதே வருடம் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவுடன் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற்று நிரந்தரமான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டார். அதனால் 2011இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சிவப்பு நிற பந்துகளில் ரொம்பவே தடுமாறியதால் விமர்சனங்களை சந்தித்தார்.

இருப்பினும் அவரது திறமையை உணர்ந்து தொடர்ந்து வாய்ப்பளித்த தோனியின் பெயரைக் காப்பாற்றும் வகையில் அடுத்த சில வருடங்களில் உலகின் அனைத்து இடங்களிலும் அபாரமாக பேட்டிங் செய்த அவர் 3 வகையான இந்திய அணியிலும் முதுகெலும்பு பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். மேலும் 2010 – 2019 வரையிலான தசாப்தத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நம்பிக்கை நாயகனாக அவதரித்தார்.

- Advertisement -

அதனால் 2010 – 2019 தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசியின் மிகப்பெரிய விருதை வென்ற அவர் அந்த காலகட்டத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக எதிரணிகளை வெளுத்து வாங்கினார். அதேபோல் 2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் தத்தளித்த இந்தியாவை தனது ஆக்ரோசம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்த அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வரலாற்று வெற்றிகளை பெற்று கொடுத்தார்.

ஆச்சர்யத்துக்கே ஆச்சர்யம்:
உலகக்கோப்பையை வெல்ல விட்டாலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் கேப்டனாக அசத்திய அவர் 23726 ரன்களையும் 70 சதங்களையும் விளாசி 33 வயதிலேயே தன்னை ஒரு ஜாம்பவானாக நிரூபித்து ஆச்சரியப்படும் வகையில் செயல்பட்டு வருகிறார். அப்படி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆச்சரியமான திறமை கொண்ட வீரராக போற்றப்படும் விராட் கோலியையே சில வீரர்கள் தங்களது திறமையால் ஆச்சரியப்படுத்திய தருணங்களும் உள்ளது. அதைப் பற்றிய வித்தியாசமான பதிவை பதிவைப் பார்ப்போம்.

- Advertisement -

3. ரோஹித் சர்மா: நவீன கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு ஈடாக குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவரால் எட்டமுடியாத இரட்டை சதங்களை அசால்ட்டாக 3 முறை அடித்து சிக்ஸர்களை தெறிக்கவிடும் ரோகித் சர்மாவும் ஆச்சரியமான திறமை கொண்ட வீரர் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 10 வருடங்களில் இந்த இருவரும் இணைந்து இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்ததால் ஹிட்மேன் ரோஹித் – கிங் கோலி என்று ரசிகர்கள் இவர்களை கொண்டாடுகின்றனர்.

அந்த நிலைமையில் ரோகித் சர்மாவுடன் உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ள விராட் கோலி கடந்த 2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பையில் அவரின் பேட்டிங்கை தொலைக்காட்சியில் பார்த்து வியப்படைந்ததாக கடந்த 2018இல் கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதிலும் உலகிலேயே பந்தை டைமிங் கொடுத்து அடிப்பதில் ரோகித் சர்மாவுக்கு நிகர் யாரும் கிடையாது என்று வியந்து பாராட்டிய விராட் கோலி அவருக்கு மட்டும் 7 – 8 வினாடிகள் கூடுதலாக இருப்பது போல் டைமிங் கொடுத்து பந்தை அடிப்பது அபாரமானது என்று பேசினார்.

- Advertisement -

2. முகமத் இர்பான்: இந்தியாவின் பாகிஸ்தானும் கடைசியாக கடந்த 2012இல் இந்திய மண்ணில் மோதிய நேருக்கு நேர் இருதரப்பு தொடரின் ஒரு போட்டியில் தன்னுடைய 147 கி.மீ வேகப்பந்தை பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் அதை அந்த போட்டி முடிந்ததும் விராட் கோலியே தம்மிடம் நேரடியாக தெரிவித்ததாக கடந்த 2020இல் கொடுத்த பேட்டியில் பாகிஸ்தானின் முகமது இர்பான் கூறினார்.

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. ” விராட் கோலி என்னிடம் இதை நேருக்கு நேராக சொன்னார். அதாவது 148 கி.மீ வேகத்தில் நான் வீசிய பந்துக்குப் பின் அடுத்த பந்தை 150 கி.மீ வேகத்தில் வீசும் போது “இவர் எந்த மாதிரியான மித வேகப்பந்து வீச்சாளர்” என்று அருகில் இருந்த பேட்ஸ்மேனிடம் என்னை திட்டியதாக என்னிடமே கூறினார்” என தெரிவித்திருந்தார்.

- Advertisement -

2. அடில் ரசித்: அதேபோல் கடந்த 2018இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு விளையாடிய ஒரு ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலியை இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் அடில் ரசித் ஜாம்பவான் ஷேன் வார்னேவை போல் தனது மாய ஜாலத்தால் கிளீன் போல்ட்டாக்கினார்.

அதனால் அப்படியே ஆச்சரியத்தில் அதிர்ந்துபோன விராட் கோலி ஒரு சில வினாடிகள் என்ன நடந்தது என்ற வகையில் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பியது சமூக வலைதளங்களில் வைரலானது.

1. எம்எஸ் தோனி: விராட் கோலியின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தோனியின் பங்கும் ஏராளமாக உள்ளது. அதனாலேயே அவர் ஓய்வு பெற்ற பின்பும் எப்போதும் “என்னுடைய கேப்டன்” என்று தோனியை உரிமையுடன் அழைத்துவரும் விராட் கோலி அவரின் நண்பராகவும் ரசிகராகவும் பல தருணங்களில் வெளிப்படையாக நடந்துகொள்கிறார்.

இதையும் படிங்க : வயதானால் வீட்டுக்கு போகணுமா? இது போதும் – தினேஷ் கார்த்திக் மீதான விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதிலடி

அந்த நிலையில் தனக்கென்று ஒரு தரத்தையும் திறமையும் வைத்துள்ள தோனி கடந்த 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை அசால்டாக பிரம்மாண்ட சிக்ஸராக பறக்கவிட்டார். அப்போது அதை எதிர்ப்புறமிருந்து பார்த்த விராட் கோலி ஒரு சில நொடிகள் அப்படியே வியந்து ஆச்சரியப்பட்டு நின்றது பெரும்பாலான ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது.

Advertisement