
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் விளையாடுகின்றன. அதில் பாதுகாப்பு காரணங்களால் தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா செமி ஃ பைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
மறுபுறம் இந்தியாவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவோம் என்று வாய் சவடால் விட்ட 3 அணிகள் செமி ஃபைனலுக்குத் கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. அது பற்றிய சிறப்பு பதிவை பார்ப்போம்.
1. வங்கதேசம்: 25 வருடங்களாக விளையாடியும் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கும் வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் சாண்டோ மிகச்சிறந்த வாய்ச்சவடால் வீரர் என்பதை அனைவரும் அறிவோம்.
ஏனெனில் 2024இல் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்கடித்ததைப் போல உங்களையும் வீழ்த்துவோம் என்று இந்தியாவை அவர் எச்சரித்தார். ஆனால் கடைசியில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் வைட்வாஸ் தோல்வியை பார்சல் கட்டியது. அந்த நிலையில் இத்தொடரில் இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் வீழ்த்தும் திறமை தங்களிடம் இருப்பதாக சாண்டோ தெரிவித்தார்.
எனவே கோப்பையை வெல்வதற்காகவே தாங்கள் சாம்பியன்ஸ் கோப்பைக்கு வந்துள்ளதாக சாண்டோ ரைமிங்கில் பேசினார். ஆனால் முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை சத்தமின்றி இந்தியா தோற்கடித்தது. அப்படியே நியூசிலாந்து அணியிடமும் தோல்வியை சந்தித்ததால் கடைசிப் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே வங்கதேசம் வீட்டுக்கு பெட்டிப் படுக்கையை கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
2. பாகிஸ்தான்: 2021 டி20 உலகக் கோப்பை, 2022 ஆசிய கோப்பையில் துபாய் மைதானத்தில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது. அதே போல இம்முறையும் துபாயில் இந்தியாவை தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவோம் என்று பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவூப் எச்சரித்தார். 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியிடம் அடிவாங்கியும் அவர் இப்படி பேசியது வேறு கதை.
ஆனால் அதே துபாய் மைதானத்தில் பாகிஸ்தானை அசால்டாக 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் தங்களை செயல் வீரன் என்பதைக் காட்டிய இந்தியா நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை கோப்பையை தக்க வைக்க விடாமல் வீட்டுக்கு அனுப்பியது. கடைசியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானதால் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது.
3. இங்கிலாந்து: கிரிக்கெட்டை கண்டுபிடித்தும் வெளிநாட்டு வீரர்களை கலவையாகக் கொண்டு விளையாடும் இங்கிலாந்தின் துவக்க வீரர் பென் டக்கெட் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்றாலும் கவலையில்லை இம்மாத துவக்கத்தில் துச்சமாக பேசினார். ஏனெனில் சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: 207 ரன்ஸ் 11.1 ஓவர்ஸ்.. ஆப்கன் கனவை உடைத்த மழை.. செமி ஃபைனலில் ஆஸி.. அசத்தியமான முடிவு இதோ
கடைசியில் அவர் விரும்பியது போலவே 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஸ் தோல்வியை இங்கிலாந்து அணிக்கு இந்தியா பரிசாக கொடுத்தது. அந்த நிலையில் இத்தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 356 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் வீழ்ந்த இங்கிலாந்து சிறிய அணியான ஆப்கானிஸ்தானிடம் 325 ரன்களை அடிக்க முடியாமல் தோற்றது. அதனால் செமி ஃபைனலுக்கு கூட தகுதிப் பெறாமல் இங்கிலாந்து வெளியேறியது.