கேப்டனாக ஏமாற்றம் ! ஐபிஎல் 2023 சீசனில் கேப்டனை மாற்றப்போகும் 3 அணிகள் – லிஸ்ட் இதோ

Kane Williamson
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று முடிவில் தேவையான வெற்றிகளை பெற்ற குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த தொடரில் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என்ற பெயரை கொண்ட மும்பையும் சென்னையும் ஆரம்பத்திலேயே சந்தித்த தொடர் தோல்விகளால் முதல் 2 அணிகளாக லீக் சுற்று உடன் நடையை கட்டியது. இத்தனைக்கும் 5 மற்றும் 4 கோப்பைகளை வென்று மிகச்சிறந்த மாஸ்டர் மைண்ட் கேப்டன்களாக கருதப்படும் ரோகித் சர்மாவும் எம்எஸ் தோனியும் அந்த அணியை வழிநடத்திய போதிலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

- Advertisement -

3 கேப்டன்கள் மாற்றம்:
இதில் சென்னையில் கூட அனுபவமில்லாத ஜடேஜா முதல் 8 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்ததால் வாய்ப்பு பறிபோனது. இருப்பினும் கூட அலமாரியில் அடுக்கி வைக்கும் அளவுக்கு கோப்பைகளை வென்ற அவர்களே அடுத்த வருடமும் கேப்டனாக செயல்படுவார்கள்.

ஆனால் ஒரு முறை கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத்தும் அரைகுறை கேப்டன்ஷிப் அனுபவம் பெற்ற கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் தலைமையில் லக்னோ மற்றும் ராஜஸ்தானும் தென் ஆப்பிரிக்காவை வழி நடத்திய அனுபவம் பெற்ற டுப்லஸ்ஸிஸ் தலைமையில் பெங்களூருவும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதால் அடுத்த வருடம் அந்த அணியின் கேப்டன் பொறுப்புகளில் மாற்றம் நிகழாது என நம்பலாம். ஆனால் ஒருசில அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாததால் அடுத்த சீசனில் கேப்டன்களை மாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதை பற்றி பார்ப்போம்.

David warner

1. ஹைதெராபாத்: 2015 முதல் ஒவ்வொரு வருடமும் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து 3 ஆர்ஞ்சு தொப்பிகளை வென்று கேப்டனாக 2016இல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 2021இல் முதல் முறையாக பேட்டிங்கில் ரன்கள் அடிக்க தவறினார் என்பதற்காக பாதியிலேயே நீக்கிய ஹைதராபாத் அணி நிர்வாகம் கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்து அவரை பெஞ்சில் அமர வைத்து அவமானப்படுத்தி கடைசியில் கழற்றி விட்டது. வில்லியம்சன் மிகச் சிறப்பாக விளையாடி தங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அந்த அணி நிர்வாகம் அப்படி ஒரு நன்றியற்ற செயலை செய்தது.

- Advertisement -

14 கோடிக்கு தக்க வைக்க பட்ட அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 216 ரன்களை 19.64 என்ற மோசமான சராசரியில் குவித்து அணியை முன்னின்று நடத்த வேண்டிய கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்படத் தவறினார். அதிலும் 93.51 என்ற அவரின் ஸ்ட்ரைக் ரேட் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அத்தனை பேட்ஸ்மேன்களை விட மிகக் குறைவாகும்.

Kane Wiiliamson

மேலும் பெரும்பாலான போட்டிகளில் அவர் விளையாடிய டெஸ்ட் இன்னிங்ஸ் ஹைதராபாத் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. இதர வீரர்களும் கைகொடுக்க தவறியதால் அவர் தலைமையில் பிளே-ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாததால் அதிர்ச்சியடைந்த அந்த அணி நிர்வாகம் அடுத்த வருடம் வில்லியம்சனை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினால் ஆச்சரிய படுவதற்கில்லை. ஏனெனில் அவர்கள் வார்னரையே ஒரு சீசனில் சிறப்பாக செயல்பட தவறியதால் யோசிக்காமல் நீக்கியவர்கள் தானே.

- Advertisement -

2. கொல்கத்தா: கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த இளம் வீரரான ஷ்ரேயஸ் ஐயரை பெங்களூர், பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு மத்தியில் ஏலத்தில் போட்டி போட்டு வாங்கிய கொல்கத்தா தங்களது புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கேற்றார் போல் இந்த வருடம் முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பதிவு செய்து முதலிடமும் பிடித்தது. ஆனால் அதன்பின் அந்த அணியின் பிளேயிங் லெவனில் நிகழ்ந்த தேவையற்ற மாற்றங்கள் தொடர் தோல்விகளை பரிசளித்து நாக்-அவுட் வாய்ப்பையும் காலி செய்தது.

DC vs KKR Shreyas Iyer Rishabh Pant

ஒரு கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் 14 போட்டிகளில் 401 ரன்கள் குவித்து முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட போதிலும் 11 பேர் அணியை தேர்வு செய்வதில் சிஇஓ மற்றும் பயிற்சியாளர் தலையிடுவதால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று ஒரு போட்டியின் முடிவில் உண்மையை போட்டுடைத்தார். அப்படி அணிக்குள் நிகழ்ந்த விஷயத்தை வெளியில் சொன்னதன் காரணமாக அந்த அணி நிர்வாகம் அவர் மீது அதிருப்தியடைந்துள்ளதால் அடுத்த சீசனில் அவரை கழற்றி விடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஏனெனில் இங்கிலாந்துக்காக உலக கோப்பையை வென்ற இயான் மோர்கன் சாம்பியன் பட்டத்தை வாங்கித் தருவார் என்று நோக்கில் 2020இன் பாதியிலேயே தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கை நீக்கிய அவர்கள் 2021இல் சாம்பியன் பட்டத்தை வாங்கித்தரவில்லை என்பதற்காக மோர்கனை ஏலத்தில் கூட வாங்காமல் டாட்டா காட்டியவர்களாயிற்றே.

Agarwal

3. பஞ்சாப்: வரலாற்றில் நிறைய கேப்டன்களை மாற்றியும் கோப்பையை வெல்ல முடியாத பஞ்சாப் இந்த முறை இளம் வீரர் மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமித்தது. ஆனாலும் அவர் தலைமையில் எதுவுமே மாறாத நிலைமையில் கடந்த 2020, 2021 சீசன்களில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வந்த அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக சென்னையின் ஜடேஜா போல இந்த வருடம் பேட்டிங்கில் சொதப்பி வெறும் 196 ரன்களை 16.33 என்ற மோசமான சராசரியில் எடுத்து தடுமாறினார். எனவே கேப்டனாக அணியை வழிநடத்த இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று தெரிந்த காரணத்தால் அடுத்த வருடம் நிச்சயமாக புதிய கேப்டனை பஞ்சாப் நியமிக்கும் என்று 100% நம்பலாம்.

Advertisement