வெ.இ தொடரில் அபாரம் : டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்க காத்திருக்கும் – 3 தரமான வீரர்கள்

Rohith
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நிறைவடைந்தது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

indvswi

- Advertisement -

அதை தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றதால் 3 – 0 என்ற கணக்கில் மீண்டும் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை முத்தமிட்டது. மறுபுறம் பல தரமான அதிரடி வீரர்கள் இருந்தபோதிலும் வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சாய்க்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார்கள்.

3 தரமான வீரர்கள்:
இந்த டி20 தொடரில் 3 – 0 என ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்ததை அடுத்து சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் இங்கிலாந்தை முந்தியுள்ள இந்தியா உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக 2 மாதங்கள் முதலிடத்தில் இருந்தது.

Rohith

அதன்பின் விராட் கோலி தலைமையில் கடந்த 6 ஆண்டுகளாக பல சரித்திரம் வாய்ந்த டி20 வெற்றிகளை பெற்ற போதிலும் இந்தியாவால் நம்பர் ஒன் இடத்தை பெற முடியவில்லை. ஆனால் கடந்த நவம்பர் மாதம் முதல்முறையாக இந்தியாவின் முழு நேர வெள்ளைப் பந்து கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா வெறும் 3 மாதங்களுக்குள் இந்தியாவின் நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வந்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கு முன்பாக தரமான வீரர்களை கொண்ட இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில் புதிதாக இந்திய அணியின் தலைமைப் பொறுப்பில் பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடுவதற்காக தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ள 3 தரமான வீரர்களை பற்றி பார்ப்போம்.

Venkatesh-iyer

1. வெங்கடேஷ் ஐயர் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு மிகசிறந்த இளம் ஆல்ரவுண்டர் என்றால் அது வெங்கடேஷ் ஐயர் என கூறலாம். கடந்த வருடம் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஓப்பனிங் பேட்டராக அசத்திய இவர் பந்து வீச்சிலும் ஒரு சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டதால் ஒரு கட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறுமா என்ற நிலையில் இருந்த கொல்கத்தா கடைசியில் இறுதிப்போட்டிக்கு எளிதாக முன்னேறியது.

- Advertisement -

அதன் காரணமாக கடந்த மாதம் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்ற இவரை இப்போது நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் முறையாக மிடில் ஆர்டரில் களமிறக்கி கேப்டன் ரோகித் சர்மா சோதனை செய்தார். இந்த 3 டி20 போட்டிகளிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை அடித்த அவர் 3 போட்டிகளிலும் சேர்த்து 92 ரன்களை 184 என்ற மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி ஒரு பினிஷராக செயல்பட்டார்.

venkatesh

இந்த 3 போட்டிகளில் 2 முறை கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இவர் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஏற்கனவே இந்தியாவிற்காக விளையாட ஆர்வமில்லாமல் பந்துவீச மறுப்பு தெரிவித்து வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் டி20 உலகக்கோப்பையில் இவருக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் தன்னால் முடிந்தவரை ஒரு ஆல்-ரவுண்டராக இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

2. ஹர்ஷல் படேல் : கடந்த ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூர் அணிக்காக முதல் முறையாக விளையாடத் தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் வாய்ப்பு பெற்ற இவர் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டதால் அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Harshal-1

தற்போது நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள இவர் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தும் திறமையை பெற்றுள்ளார். எனவே இவரையும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவரை தேர்வு செய்ய ஏற்கனவே தேர்வு குழுவினர் யோசித்து வருகிறார்கள்.

3. ரவி பிஸ்னோய்: கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்த இளம் வீரர் ரவி பிஷ்னோய் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசன்களில் விளையாடி வந்தார். பஞ்சாப் அணியில் பட்டையை கிளப்பும் வகையில் பந்துவீசி வந்த இவருக்கு தற்போது நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது.

bisnoi

குறிப்பாக இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் அறிமுகமான இவர் 17 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டதால் அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். மேலும் இவர் யூஸ்வென்ற சஹாலுக்கு பின் தற்போதைய இந்திய ஒரு நல்ல லெக் ஸ்பின்னராக தென்படுகிறார். எதிரில் நிற்கும் பேட்ஸ்மேன் எவ்வளவு அதிரடியாக விளையாட கூடியவராக இருந்தாலும் அதற்கு அஞ்சாமல் தைரியமாக பந்துவீசும் இவர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இன்னும் மிகச் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் விளையாடுவதற்காக வாய்ப்பு தாமாகவே தேடிவரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement