ஐ.பி.எல் தொடரில் இந்த 3 அணிகள் பவுலிங்கில் ரொம்ப ஸ்ட்ராங் – விவரம் இதோ

IPL-bowlers-1

இந்த வரை ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த வருடம் வெளிநாட்டில் நடப்பதால் பந்துவீச்சு மிகச் சரியாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் அணிகள் மட்டுமே பெரிதாக வெற்றி பெற முடியும் என்ற ஒரு கணிப்பு இருக்கிறது.

தற்போது ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த பந்து வீச்சை கொண்ட அணிகளின் பட்டியலைப் பார்ப்போம்

csk

சென்னை சூப்பர் கிங்ஸ் :

பார்ப்பதற்குத்தான் இந்த அணிகள் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் பந்துவீச்சாளர்களை சரியான கலவையில் வைத்திருப்பதே இந்த அணியின் மிகப்பெரிய பலம். தீபக் சாகர், ஷ்சர்துள் தாகூர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் சரியாக பந்து வீசுவார்கள். அதேநேரத்தில் கடைசி ஓவர்களில் பந்து வீசுவதற்கு ரன்களை கட்டுப்படுத்துவதற்கும் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி இருக்கிறார். இவரது வருகை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் பலத்தைக் கொடுக்கும். சுழற்பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் இம்ரான் தாஹிர், ரவிந்திர ஜடேஜா, கரண் ஷர்மா, மிட்செல் சான்ட்னர் ஆகிய திறமை வாய்ந்த அனுபவ பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்களுக்கு ஒரு மிகப் பெரிய பிரச்சனையை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

டெல்லி கேப்பிட்டல்ஸ் :

இந்த அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். ஏனெனில் இந்த அணியில் சமமான அளவில் பந்துவீச்சு பேட்டிங் என மிகச் சிறப்பாக இருக்கிறது.

குறிப்பாக வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, இஷாந்த் ஷர்மா, மோகித் ஷர்மா, கீமோ பால் போன்ற பல வீரர்கள் இருக்கின்றனர். சுழற் பந்து வீச்சை பொருத்தவரையில் அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல் ,ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த அணியிலும் மிகவும் சரியான கலவையில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும், இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர்.

srh

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

மற்ற அணிகள் எல்லாம் பேட்டிங்கை வைத்து ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது, வெறும் பந்துவீச்சை மட்டுமே நம்பி கடந்த ஐந்து வருடமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

இந்த அணியில் வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், சித்தார்த், கலீல் அஹமது, சந்தீப் ஷர்மா, பஸ்ஸில் தம்பி என பலர் இருக்கின்றனர். அதனை தாண்டி சுழற்பந்து வீச்சில் ரஷித் கான்,சபாஷ் நதீம், முகமது நபி, ஆகிய இளம் வீரர்களும் இருக்கின்றனர்.

அதனை தாண்டி 2 ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர். எப்படிப் பார்த்தாலும் இந்த அணி இந்த வருடமும் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சை கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.