சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விரைவில் சூர்யகுமார் உடைக்க வாய்ப்புள்ள ரோஹித் சர்மாவின் 3 முக்கிய சாதனைகள்

- Advertisement -

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடுமையாக போராடி ஒருவழியாக கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் அதற்குள் 30 வயதை கடந்து விட்ட அவர் தமக்கு தாமதமாக கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்டு பெரிய ரன்களைக் குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

SUryakumar Yadav 112

- Advertisement -

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இதர இந்திய வீரர்களை காட்டிலும் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ள அவர் குறுகிய காலத்திலேயே ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். அவரது பேட்டிங்கை பார்த்து வியக்கும் நிறைய முன்னாள் வீரர்கள் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று மனதார பாராட்டி வருகிறார்கள்.

மேலும் ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயிலை மிஞ்சி விட்டார் என்றும் நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் சிறந்த வீரர் என்றும் கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் தொடர்ந்து அவரை பாராட்டி வருகிறார்கள். சொல்லப்போனால் விரைவில் தம்மை மிஞ்சும் அளவுக்கு சூரியகுமார் அசத்துவார் என்று ஏபி டீ வில்லியர்ஸ் ஏற்கனவே பாராட்டியுள்ளார்.

Suryakumar Yadav

3 சாதனைகள்:
அந்தளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டு வரும் அவர் ஏற்கனவே நிறைய உலக சாதனைகளை அசால்டாக படைத்துள்ளார். அந்த வரிசையில் நவீன கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 போட்டிகளில் அதிரடியாக செயல்பட்டு ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோகித் சர்மா படைத்துள்ள சில வரலாற்றுச் சாதனைகளை சூரியகுமார் எளிதாக முறியடிக்க வாய்ப்புள்ளது. அவைகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. அதிக சதங்கள்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராக ரோகித் சர்மா 4 சதங்களுடன் சாதனை படைத்துள்ளார். ஆனால் 2007 முதல் 148 போட்டிகளில் 4 சதங்களை ரோகித் சர்மா அடித்துள்ள நிலையில் அறிமுகமான 2 வருடத்திற்குள் வெறும் 45 போட்டிகளில் சூரியகுமார் 3 சதங்களை அடித்துள்ளார்.

Suryakumar Yadav.jpeg

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 3 சதங்களை அடித்த தொடக்க வீரர் அல்லாத முதல் வீரர், 3 சதங்களை 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த முதல் வீரராக இரட்டை உலக சாதனை படைத்துள்ள சூரியகுமார் நிச்சயமாக மிக விரைவில் இந்த சாதனையை தூளாக்கி புதிய சாதனை படைப்பார் என்று இதை படிக்கும் ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

2. தொடர் அரை சதங்கள்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் அரைசதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவருமே (தலா 3) பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் இதுவரை எந்த இந்திய வீரரும் 4 தொடர்ச்சியான டி20 போட்டிகளில் அரை சதம் அடித்ததில்லை.

Suryakumar Yadav Virat kohli

அந்த நிலையில் ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் தடுமாறும் நிலையில் தற்சமயத்தில் உள்ள ஃபார்முக்கு சூரியகுமார் எளிதாக அடுத்து வரும் காலங்களில் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதங்களை அடித்து அந்த சாதனையை முழுமையாக தன் வசமாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

3. அதிக சிக்ஸர்கள்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேனாக இந்தியாவின் ரோகித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார். குறிப்பாக 140 இன்னிங்ஸில் 182* சிக்சர்களை அவர் அடித்துள்ள நிலையில் சூரியகுமார் வெறும் 45 இன்னிங்ஸில் அதற்குள் 92* சிக்ஸர்களை அடித்து அவரை நெருங்கி விட்டார்.

Suryakumar-Yadav

இதையும் படிங்க: இஷான் கிஷனை விட அவரு அவ்ளோ சூப்பர் விக்கெட் கீப்பரா? அவருக்கு எதுக்கு வாய்ப்பு – ரசிகர்கள் கேள்வி

இதில் இந்தியாவின் சிக்சர் மெஷின் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா பெரும்பாலும் ஃபுல் சாட் அடிப்பதில் மட்டுமே வல்லவர். ஆனால் சூரியகுமார் எப்படி போட்டாலும் விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் உட்பட மைதானத்தின் 360 டிகிரியிலும் சிக்ஸர்களை பறக்க விடுவதில் கில்லி ஆவார். அதனால் இன்னும் ஒரு வருடத்திற்குள் ரோகித் சர்மாவின் இந்த உலக சாதனையை உடைத்து சூரியகுமார் புதிய உலக சாதனை படைப்பார் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement