IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி – படைக்க காத்திருக்கும் 3 உலக சாதனைகள், லிஸ்ட் இதோ

Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. அதில் முதலாவதாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி களமிறங்க உள்ளது. அதில் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்ற தயாராகி வருகிறார்.

சொல்லப்போனால் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளை போலவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் வரலாற்றில் எப்போதுமே விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு நிறைய சாதனைகளை படைத்துள்ளார். அந்த வரிசையில் இந்த சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் படைக்க காத்திருக்கும் சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. அதிக ரன்கள்: டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 70 போட்டிகளில் 3653 ரன்களை 57.98 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி அதிக ரன்கள் அடித்த 2வது வீரராக சாதனை படைத்துள்ளார்.

எனவே இந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நடைபெறும் 5 போட்டிகளில் சேர்த்து இன்னும் 467 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தென்னாபிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் சாதனையை உடைத்து அவர் புதிய உலக சாதனை படைப்பார். முதலிடத்தில் ஜேக் காலிஸ் 66 போட்டிகளில் 4,120 ரன்கள் எடுத்து அந்த சாதனையை தற்போது தன்வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

2. கரீபியன் கிங்: கரீபியன் என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து விராட் கோலி இதுவரை 27 போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 1365 ரன்களை 50.55 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ளார். எனவே இந்த 2 தொடர்களிலும் சேர்த்து இன்னும் அவர் 473 ரன்களை எடுக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தற்போதைய இந்திய ஜாம்பவான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைப்பார்.

1997 – 2011 வரையிலான காலகட்டங்களில் விளையாடிய 29 போட்டிகளில் 1838 ரன்களை 55.69 என்ற சராசரியில் எடுத்துள்ள ராகுல் டிராவிட் தற்சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச அளவில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

3. அதிக சதங்கள்: அதே போல இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 5 போட்டிகளில் இன்னும் 2 சதங்களை அடிக்கும் பட்சத்தில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சாதனையையும் உடைத்து விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை ஏபி டீ வில்லியர்ஸ் உடன் (தலா 11) விராட் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:முடியும் சகாப்தம், டேவிட் வார்னர் திடீர் ஓய்வு பெறுகிறாரா? அவருடைய மனைவியின் சோகமான பதிவு இதோ

முதலிடத்தில் 80களில் வெறித்தனமான பவுலர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை ஹெல்மெட் போடாமலே அபாரமாக எதிர்கொண்ட இந்தியாவின் சுனல் கவாஸ்கர் 13 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 12 சதங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

Advertisement