இந்திய டி20 அணியில் நிலவும் 3 பிரச்சினைகளுக்கு தீர்வாகக்கூடிய வாஷிங்டன் சுந்தர் – ஒரு அலசல்

Sundar-1
Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை முத்தமிட வேண்டும் என்ற எண்ணத்துடன் உலகின் அனைத்து முன்னணி கிரிக்கெட் அணிகளும் அதற்கான மும்முரமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதனாலேயே அனைத்து அணிகளும் நிறைய சர்வதேச டி20 போட்டிகளில் மோதி வரும் நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடரில் விளையாடி வரும் இந்தியா தற்போது வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகின்றது.

IND vs WI

அந்த வரிசையில் இதுவரை நடைபெற்ற தொடர்களில் இந்தியா தோல்விகளை சந்திக்கவில்லை என்றாலும் நிறைய போட்டிகளில் தடுமாற்றத்துடனேயே செயல்பட்டு வருகிறது. அதை தீர்ப்பதற்காக நிறைய இளம் வீரர்களுக்கு சுழற்சி முறையில் இந்திய அணி நிர்வாகமும் வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய இந்திய டி20 அணியில் நிலவக்கூடிய ஒருசில பிரச்சினைகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் நல்ல தீர்வாக இருக்கும் திறமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

கடந்த 2017இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் கடந்த 4 வருடங்களில் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்று வியக்கும் அளவுக்கு இடையிடையே ஏகப்பட்ட காயங்களை சந்தித்து இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை தவற விட்டு வருகிறார். அந்த வரிசையில் ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் மீண்டும் பாதியிலேயே காயத்தால் வெளியேறினார்.

sundar

3 தீர்வாக சுந்தர்:
இருப்பினும் வழக்கம் போல மனம் தளராமல் அதிலிருந்து குணமடைந்து பயிற்சிகளை எடுத்து மீண்டும் விளையாட துவங்கியுள்ள அவர் இங்கிலாந்தின் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லன்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். அதில் நல்ல விக்கெட்டுகளையும் ரன்களையும் எடுத்த காரணத்தால் வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வேயில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் அவர் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

மேலும் அடுத்ததாக நடைபெறும் ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் அவர் தேர்வாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் அவரால் கிடைக்கக்கூடிய 3 தீர்வுகளைப் பற்றி பார்ப்போம்:

sundar

1. பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட்: பொதுவாக டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளே ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் பந்தாடி விடுவார்கள் என்பதால் வேகப்பந்துவீச்சாளர் வீசுவார்கள். ஆனால் அதற்கு விதிவிலக்காக பவர் பிளே ஓவர்களில் தைரியமாக வீசும் திறமை பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தர் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிக்காக ஆரம்பத்திலேயே சிறப்பாக பந்துவீசியதை பார்த்தோம்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை 55 டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் அவர் 24 விக்கெட்டுகளை 7.07 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து வருகிறார். பந்தை பெரிய அளவில் சுழற்றும் திறமை இல்லை என்றாலும் லைன், லென்த் போன்ற அம்சங்களால் சாதிக்கும் இவருக்கு இந்திய டி20 அணியில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் பவர்பிளே ஓவரில் விக்கெட்களை எடுக்க தடுமாறினால் தைரியமாக பந்துவீசும் வாய்ப்பை கொடுக்கலாம். அதில் குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே இந்தியாவின் கையை ஓங்க வைக்கும் திறமை அவரிடம் உள்ளது.

Sundar 2

2. இடதுகைக்கு சவால்: தற்போதைய இந்திய அணியில் முதன்மை சுழல் பந்துவீச்சாளர்களாக சஹால் மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளனர். பந்தை சுழற்றக்கூடிய இவர்கள் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இடதுகை பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்குவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது.

- Advertisement -

அந்த சமயத்தில் பெரிய அளவில் பந்தை சுழற்றாத வாஷிங்டன் சுந்தர் ஸ்டம்ப் லைனில் அதிக விட்த் கொடுக்காமல் கச்சிதமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தும் திறமை பெற்றுள்ளார். மேலும் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 24 முறை இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ள இவர் அவர்களுக்கு எதிராக 110 என்ற குறைவான ஸ்டிரைக் ரேட்டில் பந்து வீசி வருகிறார்.

sundar 2

3. பேட்டிங் வரிசையின் ஆழம்: இப்படி பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கும் இவர் பேட்டிங்கிலும் கணிசமான ரன்களை எடுக்கும் திறமை பெற்றவர். உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய போட்டிகளில் டாப் ஆர்டரில் விளையாடிய அனுபவம் பெற்றுள்ள இவர் சமீப காலங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக்கு தேவையான முக்கிய ரன்களை சேர்த்தார்.

இதையும் படிங்க: IND vs WI : அவரை கட்டுப்படுத்தும் லைன், லென்த்தே கிடையாது – எப்படி போட்டாலும் அடிப்பார், இந்திய வீரரை பாராட்டும் சஞ்சய் மஞ்ரேக்கர்

குறிப்பாக அகமதாபாத் நகரில் பேட்டிங்கில் சவாலான பிட்ச்சில் 96 ரன்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க காபா டெஸ்ட் போட்டியில் எடுத்த கணிசமான ரங்களும் ரசிகர்களால் மறக்க முடியாது. எனவே இவரை டி20 அணியில் சேர்க்கும் போது பேட்டிங் வரிசையின் ஆழம் அதிகரித்து இந்தியாவுக்கு மேலும் வலு சேர்க்கும்.

Advertisement