வீழ்த்த முடியாத அணியாக உருவெடுத்துள்ள பெங்களூரு அணி – புதிய ஆர்.சி.பி அணியின் 3 முக்கிய பலங்கள்

RCB
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14வது சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத அணியாக இருந்து வருகிறது பெங்களூர் அணி. இத்தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்று மிகவும் பலம் வாய்ந்த அணியாக மாறியிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. எப்பொழுதும் ஆரம்பத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பெங்களூரு அணி இம்முறை புத்துணர்ச்சி பெற்று துவக்க போட்டிகளிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அப்படி பெங்களூரு அணி பலமடைய 3 முக்கிய காரணங்கள் பார்க்கப்படுகின்றன. அதைப்பற்றிய தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

maxwell

- Advertisement -

வலுவான பேட்டிங் ஆர்டர்:

கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூர் அணியில் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இந்த இருவர் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடி வந்தனர். ஒருவேளை இவர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அப்போட்டியில் பெங்களூர் அணிக்கு தோல்வி உறுதி என்றே இருந்தது.

ஆனால் இப்போது அப்படி இல்லை. கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக அறிமுகமான தேவ்தத் படிக்கல் ஓப்பனிங்கில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். மேலும் வீரர்கள் ஏலத்தின் போது, மேக்ஸ்வெல்லை பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தது பெங்களூர் அணி. அவரும் தற்போது தனது பழைய பார்முக்கு திரும்பியிருக்கிறார் மேக்ஸ்வெல். கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இரு வீரர்களை மட்டுமே நம்பி இருந்த பெங்களூரு அணிக்கு மேக்ஸ்வெல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் பங்களிப்பு அந்த அணியின் பேட்டிங் ஆர்டரை மிகவும் பலம் வாய்ந்ததாக மாற்றி இருக்கிறது.

- Advertisement -

Shahbaz 1

பௌலிங் யூனிட்:

தனது அற்புதமான பவுலிங்கின் மூலம் பெங்களூர் அணியின் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்து வருகிறார் முகமது சிராஜ். ஆஸ்திரேலிய தொடரில் ஜொலித்த முகமது சிராஜ் அதே பார்மை இந்த ஐபிஎல் தொடரிலும் வெளிக்காட்டுகிறார். இந்த ஐபிஎல் தொடரின் முதல் மெய்டன் ஓவரை வீசியது சிராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏலத்தில் எடுத்த ஹர்ஷல் பட்டேல் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். டெத் ஓவர்களில் அற்புதமாக பந்துவீசி எதிரணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். மேலும் இந்தத் தொடரில் ஒரு மேட்ச்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சாஹலும் தனது பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். சபாஷ் அஹமதும் பெங்களூர் அணிக்கு ஒரு பார்ட் டைம் பௌலராக இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக திகழ்கிறது.

Harshal 1

கோலியின் கேப்டன்சி:

பெங்களூர் அணியின் மிக முக்கிய பலமாக திகழ்வது அந்த அணி கேப்டன் கோலியின் வித்தியாசமான முடிவுகள் தான். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் சபாஷ் அஹமதை பவுலிங் போட வைத்தது, நேற்றைய போட்டியில் மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ஆட வைத்தது என வித்தியாசமான முடிவுகளை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். மேலும் பீல்டிங் செய்யும்போது அந்த அணியின் வீரர்களுடன் பேசிக் கொண்டே இருப்பதும், அவர்களுக்கு ஊக்கம் அளித்து கொண்டே இருப்பதும், போட்டிக்கு முன் ஒவ்வொரு வீரர்களிடமும் அவர்களுக்கான பணி என்ன என்பதை தெளிவாக கூறி அதன்படி விளையாட வைப்பதும் அந்த அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்வதற்கு மிக முக்கிய காரணமான ஒன்றாகும்.

Advertisement