இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவ காரணமாக அமைந்த 3 விடயங்கள் – விவரம் இதோ

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் எடுத்திருந்த போதிலும் இங்கிலாந்து அணி அதை மிக எளிதில் சேஸ் செய்து வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை இழந்தது. பின்னர் விராட் கோலியின் அரைசதம் (66), கேஎல் ராகுல் இன் சதம் இல்(108) மற்றும் ரிஷப் பண்ட் இன் அசத்தலான அரைசதம் (77) காரணமாக இந்தியா 336 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ அமைத்துக் கொடுத்த சிறப்பான ஓபனிங்கை பயன்படுத்தி மிக எளிதில் சேஸ் செய்து வெற்றி பெற்றது.

rahul

- Advertisement -

ஜேசன் ராய் அரைசதம் (55), பேர்ஸ்ட்ரோவின் சதம் (124) மற்றும் பென் ஸ்டோக்ஸ் இன் அரை சதம் (99) காரணமாக மிக எளிதில் 43.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து 337 எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான மூன்று முக்கிய காரணங்களை இந்த பதிவில் காணலாம்.

பவர் பிளே ஓவர்களில் சொதப்பியது :

இந்திய அணி பவர் பிளே ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காதது மிகப்பெரிய நம்பிக்கையாக இங்கிலாந்து அணிக்கு அமைந்தது. முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் இங்கிலாந்து அணி 59 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ஒருவேளை பவர் பிளே ஓவர்களில் விக்கெட் எடுத்து இருந்தால் இந்திய அணி நெருக்கடியை ஏற்படுத்தி இருந்திருக்கும்.

- Advertisement -

பிரசித் கிருஷ்ணா சொதப்பல் :

பிரசித் கிருஷ்ணா பாதி ஓவர்கள் சரியான லைனில் போடாமல் ஷாட் பாலாக போட்டு இங்கிலாந்து அணி வீரர்களுக்கு சாதகமாக ரன்களை கொடுத்து வந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட பிரசித் கிருஷ்ணா சரியான லைனில் போட்டு இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒருவேளை அவர் இதை முதலில் செய்து இருந்து நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தால் இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து அணியை தோற்கடித்தது இருந்திருக்கும்.

குல்தீப் யாதவை சரியாக பயன்படுத்த விதம் :

முதல் ஐந்து ஓவர்களை வீசிய குல்தீப் யாதவ் வெறும் 27 ரன்களை மட்டுமே கொடுத்து இருந்தார். அதற்கடுத்தபடியாக குருனால் பாண்டியாவுக்கு ஓவர்களை கொடுத்து குல்தீப் யாதவுக்கு சிறிது இடைவெளியை ஏற்படுத்தினார். குல்தீப் யாதவுக்கு தொடர்ந்து பந்துவீச வாய்ப்பு அளித்து இருந்தால் அவர் நிச்சயம் இது பென் ஸ்டோக்ஸ் விக்கெட் கைப்பற்றி இருந்திருப்பார். அப்படிச் செய்யாமல் விட்டதன் மூலமாக குருனால் பாண்டியாவின் ஓவரில் சிக்ஸர் அடித்து பின்னர் அதே சிக்ஸர் மலைகளை குல்தீப் ஓவரில் அடித்து பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். எனவே குல்தீப் யாதவை சரியாகப் பயன்படுத்தாத காரணத்தினாலும் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement