ஐபிஎல் தொடரில் கேப்டன் கூல் தல தோனியை விட அதிக சம்பளம் வாங்கும் 3 சிஎஸ்கே வீரர்கள் – லிஸ்ட் இதோ

MS Dhoni CSK Ruturaj
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற 2023 ஐபிஎல் தொடரில் 5வது கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமான அணி என்ற பரம எதிரி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து அசத்தியது. குறிப்பாக ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற்ற சென்னைக்கு மாபெரும் ஃபைனலில் நடப்பு சாம்பியன் குஜராத்தை ரவீந்திர ஜடேஜாவின் அட்டகாசமான ஃபினிஷிங் செய்து கோப்பையை வென்று கொடுத்தது மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. முன்னதாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு தோனி காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.

ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அழுத்தத்தில் தடுமாறிய ஜடேஜா தலைமையில் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இருப்பினும் இந்த வருடம் ஆரம்பம் முதலே தோனி தலைமையில் சொல்லி அடித்த சென்னை சீரான வெற்றிகளை பெற்று வரலாற்றில் 10 முறை ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணியாகவும் சரித்திரம் படைத்தது. அப்படி ஒரே சீசனில் பெரிய மாற்றம் தெரியும் அளவுக்கு 2008 முதலே மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து விக்கெட் கீப்பராகவும் அதிரடி ஃபினிஷராகவும் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் தோனி சென்னையின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக செயல்படுவதாலேயே ரசிகர்கள் அவரை தல என்று கொண்டாடுகின்றனர்.

- Advertisement -

அதிக சம்பளம்:
இருப்பினும் 41 வயதை கடந்துள்ள தோனி விரைவில் ஓய்வு பெறப்போகிறோம் என்பதை உணர்ந்து தம்முடைய சம்பளத்தை கடந்த வருடமே 16 கோடியிலிருந்து 12 கோடியாக குறைத்துக் கொண்டார். அதன் காரணமாக இந்த சீசனில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய 3 வீரர்களை பற்றி பார்ப்போம்:

3. தீபக் சஹார்: ராஜஸ்தானை சேர்ந்த இவர் ஆரம்ப காலங்களில் அடையாளம் தெரியாமல் இருந்தாலும் 2018இல் சென்னை அணிக்காக விளையாடத் துவங்கியது முதல் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரராக வரலாறு படைத்தார். அதனால் இந்திய டி20 அணியில் முதன்மை பவுலராகவும் உருவெடுத்த அவரை சென்னை நிர்வாகம் 2022 சீசனில் 14 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.

- Advertisement -

சொல்லப்போனால் வரலாற்றில் நேரடி ஏலத்தில் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து ஒரு வீரரை சென்னை வாங்கியது அதுவே முதல் முறையாகும். ஆனால் துரதிஷ்டவசமாக காயத்தை சந்தித்து ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர் இந்த வருடமும் பாதி போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் கடைசிக்கட்ட போட்டிகளில் வந்து சிறப்பாக செயல்பட்ட அவர் 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

2. ரவீந்திர ஜடேஜா: சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தடுமாறிய இவர் தோனியின் அரவணைப்பில் வளர்ந்தவர் என்றே சொல்லலாம். அதனால் 2012 முதல் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் வாங்கப்பட்ட அவர் அப்போதிலிருந்தே முதன்மை ஆல் ரவுண்டராக வெற்றிகளில் பங்காற்றி வந்தார்.

- Advertisement -

குறிப்பாக தோனி ஃபார்மை இழந்த 2020க்குப்பின் மிகச் சிறந்த பினிஷராகவும் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றிய அவருக்கு 2022 சீசனில் 16 கோடியாக சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அந்த சம்பளத்திற்கு தகுதியானவன் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வருடம் ஃபைனலில் சிக்சரும் பவுண்டரியும் அடித்த ஜடேஜா கேப்டன் தோனி இடுப்பில் வைத்து பாராட்டும் அளவுக்கு அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து 5வது கோப்பையை வெல்ல உதவினார்.

1. பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாகவும் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் இருப்பதால் ஓய்வு பெற்ற பிராவோவின் இடத்தை நிரப்புவதற்காக 2023 சீசனில் இவரை 16.25 கோடி என்ற வரலாற்றின் உச்சகட்ட தொகைக்கு சென்னை நிர்வாகம் ஏலத்தில் வாங்கியது. அதனால் தோனிக்கு பின் கேப்டனாகவும் செயல்பட தகுதியானவர் என்று சென்னை ஆனந்தமடைந்தனர்.

இதையும் படிங்க:நாங்களா குழந்தைகளை அனுப்ப சொன்னோம், ஐடியா இல்லாத இந்தியாவுக்கு தப்பான கணக்குடன் பாக் வீரர் பதிலடி – நடந்தது என்ன?

ஆனால் 2 போட்டியில் மட்டுமே விளையாடி காயமடைந்த அவர் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை சார்பில் இலவச சிகிச்சைகளை மட்டுமே மேற்கொண்டு எந்த வேலையும் செய்யாமலேயே 16.25 கொடிகளுடன் நாடு திரும்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் அடுத்த வருடம் அந்த சம்பளத்திற்கு சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அவர் மீது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement