சி.எஸ்.கே அணியில் ஹர்பஜன் சிங் இடத்தை பிடிக்க தகுதியான 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Harbhajan

சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமிற்குள் தற்போது வரை பல்வேறு கலவரங்கள் நடைபெற்று வருகிறது. கரோனா வைரஸ் பதிமூன்று பேரை தாக்கியது. அதன் பின்னர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. என பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் திடீரென ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து சொந்த பிரச்சனைகள் வெளியேறிவிட்டார். இவருக்கு மாற்றாக வர வாய்ப்புள்ள வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்

Manigandan

எஸ் மணிகண்டன் :

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்காக ஆடிய இளம் வீரர்களில் இவரும் ஒருவர். சுழற்பந்துவீச்சாளர். உள்ளூர் வீரர்களை எடுக்க வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நினைத்தால் இவரை கண்டிப்பாக எடுக்கலாம். கோவை கிங்ஸ் அணிக்காக ஆடிய இவர் 10 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். தற்போது இவருக்கு 24 வயது தான் ஆகிறது ஹர்பஜன் சிங் போன்ற வீரரை மாற்றும் அளவிற்கு அனுபவம் இல்லை என்றாலும் இவர் மிகச் சிறந்த திறமை கொண்டவர்..

Abhinav

எம் அபினவ் :

- Advertisement -

இவர் லெக் ப்ரேக் பவுலர் ஆவார். மணிகண்டனை போலவே இவரும் டிஎன்பிஎல் தொடரில் பட்டையை கிளப்பிய வீரர் ஆவார். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரி திண்டுக்கல் அணிக்காக விளையாடி கடந்த முறை 10 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். தற்போது இருக்கும் பியூஸ் சாவ்லா, கரண் ஷர்மா போன்ற பந்துவீச்சாளர்களுக்கு இணையான திறமை கொண்டவர். உள்ளூர் வீரர் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும்

Saxena

ஜலஜ் சக்சேனா :

உள்ளூர் போட்டிகளில் ஜாம்பவான் வீரரான இவர் ஆல்-ரவுண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது கேரள அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் இவர் தற்போது வரை 347 விக்கெட்டுகளும் 1334 ரன்களும் அடித்திருக்கிறார். இதனை செய்த வெகுசில வீரர்களில் இவரும் ஒருவர் கடந்த சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். இந்த முறை எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்காததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரை ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக எடுக்க வாய்ப்பு இருக்கிறது.