சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது தாய் நாட்டுக்கு எதிராக மற்றொரு அணியில் விளையாடிய 3 வீரர்களின் பட்டியல்

Archer
- Advertisement -

உலகில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் பெரியவர்களாகி ஏதேனும் ஒரு துறையில் தங்களது வாழ்க்கையைத் துவங்கும் போது அதில் உலக அளவில் தாம் பிறந்த தாய் நாட்டை தலைநிமிரும் வகையில் செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என்ற அடிப்படையான உணர்வு ரத்தத்தில் கலந்து வளர்வார்கள். அதிலும் எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் சர்வதேச அளவில் தங்களது நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்டு தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் லட்சியமாக இருக்கும்.

Top 5 Exciting Young Talented Players to Watch Out in IPL 2022

- Advertisement -

அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டில் தேசத்துக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து தொடர்ச்சியாக சில வருடங்கள் சிறப்பாக செயல்பட்டு தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வீரர்கள் ஒருகட்டத்தில் நாட்டுக்காக விளையாட தேர்வாகி தங்களது லட்சிய பயணத்தில் முதல் படியை தொடுவார்கள். அப்படி நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெறும் சில வீரர்களின் வாழ்வில் விதியும் சற்று விளையாடி தொடர்ந்து விளையாட முடியாத நிலைமையை ஏற்படுத்தும்.

அதாவது ஏதேனும் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் வேறு நாட்டுக்கு குடி பெறுவது அல்லது காயத்தால் வெளியேறுவது போன்ற சூழ்நிலைகளால் ஒரு கட்டத்தில் நாட்டுக்காக விளையாட முடியாத நிலைமை சில வீரர்களுக்கு ஏற்படும். இருப்பினும் இடம் மாறினாலும் மிகவும் பிடித்து கற்று வளர்ந்த விளையாட்டை விட முடியாது என்ற காரணத்தால் புதிதாக குடி பெயர்ந்த நாட்டுக்காகவும் கிரிக்கெட்டில் விளையாட முயற்சிக்கும் வீரர்களுக்கு அதிலும் சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பு தாமாக தேடி வரும்.

chand

நாட்டுக்காகவும் எதிராகவும்:
அதாவது தாய்நாட்டுக்காக விளையாடிய வீரர் ஒரு கட்டத்தில் அதே பிறந்த தேசத்துக்கு எதிராக விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்களில் சர்வ சாதாரணம் என்றாலும் சர்வதேச அளவில் நிகழ்வது அரிதினும் அரிதான ஒன்றாகும். அதிலும் சிலர் இரு நாட்டுக்காக விளையாடினாலும் தங்களது தாய் நாட்டுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை பெற மாட்டார்கள். அந்த வகையில் வரலாற்றில் தாய்நாட்டுக்காகவும் ஒரு கட்டத்தில் அதே தாய் நாட்டுக்கு எதிராகவும் விளையாடிய 3 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. லுக் ரோன்சி: ஆஸ்திரேலியாவில் பிறந்து அந்த அணிக்காக சர்வதேச அரங்கில் கடந்த 2008இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த டி20 போட்டியில் அறிமுகமான இவர் ஆரம்ப காலத்திலேயே சிறப்பாக செயல்பட தவறியதுடன் பார்மையும் இழந்தார். அதனால் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு விளையாடும் வாய்ப்பை பெறாத இவர் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு குடி பெயர்ந்து அந்த நாட்டுக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார்.

Ronchi

2013 – 2017 வரையிலான காலகட்டத்தில் நியூசிலாந்துக்காக 85 ஒருநாள் போட்டிகளிலும் 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய அவர் அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடினார். இருப்பினும் நியூசிலாந்திலும் சுமாராகவே செயல்பட்ட அவர் கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

2. ஜோப்ரா ஆர்ச்சர்: இன்றைய தேதியில் உலக அளவில் அதிரடியான வேகத்தில் பந்து வீசும் பவுலராக கருதப்படும் இவர் வெஸ்ட் இண்டீஸில் பிறந்து அந்த அணிக்காக அண்டர்-19 அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். ஆனால் ஆரம்பத்திலேயே பெரிய அளவில் காயத்தை சந்தித்த அவரை அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் வாரியமும் கண்டுகொள்ளாத கொள்ளாததால் பொறுமையிழந்த அவர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து கோல்பாக் விதிமுறைப்படி அந்த நாட்டுக்காக கடந்த 2019இல் சீனியர் அளவிலான சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

Archer

அந்த நிலைமையில் நடைபெற்ற உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வெறித்தனமாக பந்துவீசிய அவர் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் உலகக் கோப்பையை இங்கிலாந்து முதல் முறையாக வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இடையிடையே காயங்களை சந்தித்தாலும் அந்த அணியின் முதன்மை பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

1. இயன் மோர்கன்: கிரிக்கெட்டை கண்டுபிடித்தாலும் அதில் உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு வீரர்களும் வித்தையும் இல்லாமல் திணறிய இங்கிலாந்துக்கு விடிவெள்ளியாக வந்தவர்தான் பக்கத்து நாட்டை சேர்ந்த இயன் மோர்கன். ஆம் அயர்லாந்தைச் சேர்ந்த இவர் 2006இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 99 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். 2006 – 2009 வரை அயர்லாந்துக்காக விளையாடிய காலகட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சில போட்டிகளில் விளையாடிய அவருக்கு அந்நாட்டு வாரியம் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கவில்லை.

Eoin Morgan 2019 WOrld Cup

அதனால் அருகிலிருந்த இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து 2009 முதல் அந்த அணிக்காக விளையாட துவங்கிய அவர் 2014இல் கேப்டனாகவும் பொறுப்பேற்று அடுத்த சில வருடங்களிலேயே தரமான அதிரடி வீரர்களை கண்டறிந்து 2019இல் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். சமீபத்தில் சுமாரான பார்ம் மற்றும் காயம் காரணமாக 35 வயதிலேயே ஓய்வு பெற்ற அவர் 2009 – 2021 வரையிலான காலகட்டத்தில் நிறைய போட்டிகளில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடினார்.

Advertisement