இந்த இலங்கை தொடரோடு முடிவுக்கு வந்த 3 இந்திய வீரர்களின் கிரிக்கெட் கேரியர் – லிஸ்ட் இதோ

Debue

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த தொடரில் ஷிகார் தவான் தலைமையில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட பல இளம் வீரர்கள் இந்த தொடரில் அறிமுக வாய்ப்பை பெற்றனர். ஒருநாள் தொடரின்போது சேத்தன் சகாரியா, கிருஷ்ணப்பா கௌதம், ராகுல் சாகர், நித்திஷ் ராணா ஆகியோர் அறிமுகமாகினர். மேலும் டி20 தொடரின் போது வருன் சக்ரவர்த்தி, சகாரியா, சந்தீப் வாரியர், படிக்கல் ஆகியோரும் இந்திய அணிக்காக அறிமுகமாகினர்.

INDvsSL

இந்த தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். ப்ரித்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், படிக்கல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு செயல்பட்டதால் இனி வரும் தொடர்களில் அவர்களது பெயர் பரிசீலனை செய்யப்படும். ஆனால் இந்த தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சில கிரிக்கெட் வீரர்களுக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்தத் தொடரின் போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இனி மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்ய வாய்ப்பில்லாத மூன்று வீரர்களை நாங்கள் உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

Gowtham

கிருஷ்ணப்பா கௌதம் : இந்த ஆண்டு சிஎஸ்கே அணியால் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர். ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு ஒருநாள் போட்டியின்போது வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தனது அறிமுக போட்டியில் பேட்டிங்கில் 2 ரன்களை மட்டுமே அடித்த அவர் பவுலிங்கில் ஒரு விக்கெட்டை மட்டும் தான் கைப்பற்றினார். அது மட்டுமின்றி அவரது பந்து வீச்சை இலங்கை அணி வீரர்கள் எளிதாக எதிர் கொண்டதால் மீண்டும் இவர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதே போன்று தற்போது 32 வயதாகும் இவருக்கு இன்னும் எத்தனை போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என்பதால் மீண்டும் இவர் தேர்வாவது கடினம்.

- Advertisement -

Nitish-Rana

நிதீஷ் ராணா : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது ஒருநாள் தொடரில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே 7 ரன்கள் மட்டுமே அடித்து தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இடம் பெற்ற இவர் இரண்டு போட்டிகளில் சேர்த்து 15 ரன்கள் மட்டுமே அடித்ததால் இவருக்கு இனி இந்தியில் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது. ஏனெனில் மிடில் ஆர்டரில் ஏற்கனவே இந்திய அணியில் பல வீரர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி சூரியகுமார், இஷான் கிஷன் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருப்பதால் நிச்சயம் ராணா இனி இந்திய அணிக்கு தேர்வாவது கடினம்.

sandeep warrier

சந்தீப் வாரியார் : ஏற்கனவே இந்திய அணிக்காக ஏகப்பட்ட திறமையான பந்து வீச்சாளர்கள் இருக்கும் வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தன்னை நிரூபிக்க தவறிவிட்டார் என்றே கூறலாம். 30 வயதாகும் இவர் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவது கடினம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement