இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் தங்களது இடத்தை இழக்கும் ஆபத்தில் உள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND

எட்டாவது டி20 ஓவர் உலக கோப்பையானது அக்டோபர் மாதம் 13ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், விளையாடும் வீரர்களில் சில பேருக்கு கொரானா தொற்று உறுதியானதையடுத்து, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதியாகி ஐபிஎல் தொடரே பாதியில் நிறுத்தப்பட்டதால், இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 ஓவர் உலகக் கோப்பையையும் ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றும் முடிவில் ஐசிசியும், இந்திய கிரிக்கெட் வாரியமும் இருப்பதாக தெரிகிறது.நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து வந்து கொண்டிருந்த போது, சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் தங்களது திறமையை நிரூபித்து எப்படியாவது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால் அவர்களின் கனவை கலைக்கும் விதமாக ஐபிஎல் இப்படி பாதியிலேயே நின்றுவிட்டது. சரி யார் அந்த அனுபவ வீரர்கள்?

ஷிகர் தவான் :

- Advertisement -

இந்திய அணியின் டி20 போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்தவர்தான் ஷிகர் தவான். ஆனால் அவருடைய மிக நிதானமான ஆட்டம் மற்றும் பல்வேறு இளம் வீரர்களின் வருகையும் இந்திய அணியில், அவருடைய இடத்தை கேள்விக்குறி ஆக்கியது. அதற்குப் பிறகு இந்திய டி20 அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார் ஷிகர் தவான். ஆனால் சென்ற ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக அற்புதமாக செயல்பட்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட நான் தகுதியானவன் தான் என்பதை நிரூபித்தார் ஷிகர் தவான். அதற்கேற்றார் போல் அவருக்கு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் தொடரிலும், இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் போட்டியிலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அந்த வாய்ப்புகளை மீண்டும் வீணடித்த ஷிகர் தவானை விளையாடும் அணியிலிருந்து இருந்து வெளியேற்றிய விராட் கோலி, மற்ற போட்டிகளில் அவரே இந்திய அணியின் ஓப்பனிங்காக களமிறங்கினார். அத்த்தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், அத் தொடரின் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் உலக கோப்பை இந்திய அணியிலும் நானேதான் ஓப்பனிங்கில், ரோகித் சர்மாவுடன் களம் இறங்குவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கடையில் உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற்று வந்து கொண்டிருந்த இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஷிகர் தவான், தனது அற்புதமான பேட்டிங் திறமையை மீண்டும் வெளிப்படுத்தினார். இத்தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 380 ரன்களை குவித்தது மட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக அவரின் மேல் வைத்த அனைத்து விமர்ச்சனங்களையும் அடித்து நொறுக்கினார். ஷிகர் தவானின் இந்த அற்புதமான பேட்டிங்கை பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் உலக கோப்பை இந்திய அணியில் ஷிகர் தவானை ஓபனில் விளையாட வைக்க வேண்டுமென்று கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நின்றதால் ஷிகர் தவானால் தன் முழு திறைமையையும் வெளிக்காட்ட முடியாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் அவருடைய இடமும் கேள்விக் குறியாக ஒன்றாகவும் சென்றிருக்கிறது

- Advertisement -

கே எல் ராகுல் :

கடந்த ஆண்டு ஐபிஎல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியிலில் முதலிடத்தில் இருந்தார் கே எல் ராகுல். எப்போதுமே இந்தியாவின் சிறந்த டி20 பேட்ஸ்மேனாக விளங்கும் கே எல் ராகுல், இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டி20 போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார் என்பது அவர் ஆடிய விதத்திலிருந்தே அனைவருக்கும் தெரிந்தது. எனவே அந்த தொடரில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பன்ட்டிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் கே எல் ராகுல் தனது திறமையை நிரூபித்து இருந்தாலும், டி20 கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக இந்த ஐபிஎல் தொடரை கருதியிருந்தார்.

அதே போல் இந்த தொடரில் தனது திறமையை நிரூபித்த கே எல் ராகுல் 7 போட்டிகளில் விளையாடி 331 ரன்கள் அடித்திருந்த போது, அப்பென்டிக்ஸ் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவைச்சிகிச்சை முடிந்து தொடரின் இறுதிப் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரே நிறுத்தி வைக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்தியாவிற்கு எந்த டி20 தொடரும் இல்லை. எனவே அறுவை சிகிச்சைக்குப் பின்னர், டி20 போட்டிகளில் தான் விளையாட தகுதியுடையவர் என்பதை நிரூபிக்க கே எல் ராகுலுக்கு நேரம் தேவை என்பதால் அவருடைய இடமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

சாஹல் :

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டி20 அணியில் இடம்பிடித்து வரும் சாஹல் மோசமாக பந்து வீசி எதிரணி வீரர்களுக்கு ரன்களை வாரி வழங்கி கொண்டு வந்திருக்கிறார். மேலும் விக்கெட் வீழ்த்துவதிலும் தடுமாறி வந்த சாஹல், கடந்த இங்கிலாந்து எதிரான டி20 தொடரிலும் மோசமாக பந்து வீசியதால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ராகுல் சஹாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படியே பந்துவீசி கொண்டிருந்தால் இந்திய அணியில் தனது இடம் பறிபோய்விடும் என்பதை நன்கு உணர்ந்திருந்த சாஹல், இந்த ஐபிஎல் தொடரில் நன்றாக பந்து வீசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் இருந்தார். ஆனால் அவரால் இந்த தொடரிலும் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய எகானமி ரேட்டும் கிட்டத்தட்ட 9 ஆக இருக்கிறது.

அடுத்து வரும் போட்டிகளிலாவது அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில்தான் ஐபிஎல் தொடர் இப்படி பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த ராகுல் சஹார் இத் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசியுள்ளார். 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் சஹார் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஹாலுக்கு பதில் இடம் பிடிப்பார் என்றே கருதப்படுகிறது.

Advertisement