இலங்கை தொடர் முடிந்ததும் விராட் கோலியின் வேண்டுகோள் படி இங்கிலாந்துக்கு பறக்கும் – 3 இளம்வீரர்கள்

kohli 2
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து நாட்டில் இருந்து வருவதால் அந்த அணியே தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் என்று பி.சி.சி.ஐ சார்பில் கூறப்பட்டுள்ளது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாக வீரர்களுக்கு போதிய பயிற்சி வேண்டும் என்கிற காரணத்தினால் தற்போது இந்திய வீரர்கள் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர். தற்போது இந்த இந்திய அணியில் மூன்று வீரர்கள் காயம் காரணமாக விளங்கியுள்ளனர்.

ஏற்கனவே துவக்க வீரர் கில் காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு மாற்று வீரராக இந்தியாவிலிருந்து வீரர்களை அனுப்புமாறு விராட் கோலி ஏற்கனவே விடுத்த வேண்டுகோளுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயத்தால் விளையாட விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு தற்போது இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

sundar 2

இந்நிலையில் இந்த மூவருக்கும் பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதே போன்று இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரை இங்கிலாந்திற்கு அனுப்புமாறு விராத் கோலி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதனை உறுதி செய்த பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் :

Shaw

இங்கிலாந்து தொடரில் இருந்து மூன்று பேர் விலகி உள்ளதால் நிச்சயம் அவர்கள் பதிலாக ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கை தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு செல்வார்கள் என்றும் மேலும் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்படுவார் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement