WTC Final : கே.எல் ராகுலுக்கு மாற்றுவீரராக இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

KL-Rahul
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் மீதான ரசிகர்களின் கவனத்தை அதிகரிக்கும் வகையில் ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தியது. அதன்படி வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் நகரில் நடைபெற உள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் 15 பேர் கொண்ட இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் குறிப்பிட்ட சிலவீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளது நமது அணிக்கு பெரிய இழப்பு என்று கூறலாம். அந்த வகையில் ஏற்கனவே பும்ரா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்தால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வேளையில் அண்மையில் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் காயமடைந்த லக்னோ அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னணி வீரருமான கே.எல் ராகுல் காயம் அடைந்து இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணி பெரிய இழப்பை சந்திக்க இருக்கிறது. ஆனாலும் அவருக்கான மாற்றுவீரரை அறிவித்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறக்கூடிய மூன்று வீரர்களை பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.

Agarwal-2

1) மாயங்க் அகர்வால் : ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் கடைசியாக 2022-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பிறகு அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இருப்பினும் 2022-23 ரஞ்சி தொடரில் 990 ரன்களை 13 போட்டிகளில் அடித்துள்ளதால் அவருக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று இதுவரை இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாகி அவரது அறிமுக போட்டியிலேயே இரண்டு அரைசதங்களை அடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sarfaraz-khan-2

2) சர்பராஸ் கான் : இந்திய அணியின் இளம் வீரரான இவர் இதுவரை இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும் ரஞ்சி தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கடந்த சில ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி தொடரிலும் 92 ரன்கள் சராசரி உடன் 556 ரன்கள் குவித்துள்ள இவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : விராட் மீது தப்பில்ல, இந்த மாதிரி ஒரு அடாவடி கோச்’ச பார்த்ததில்லை – கம்பீரை விளாசும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

3) அபிமன்யு ஈஸ்வரன் : இவரும் சமீபத்திய இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக பயணித்து வந்தாலும் இதுவரை இந்திய அணிக்காக எந்த ஒரு போட்டியிலும் அறிமுகமாகவில்லை. பெங்கால் அணியின் கேப்டனான இவர் இந்த ஆண்டு ரஞ்சி தொடரில் 798 ரன்களை அடித்ததோடு மிகச் சிறப்பான பார்மையும் வெளிப்படுத்தி வருவதால் அவரும் இந்திய அணியில் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement