ரன்களை வழங்கும் ஹர்ஷல் படேலுக்கு பதில் டி20 உ.கோ’யில் சிறப்பாக செயல்படக்கூடிய 3 இந்திய பவுலர்களின் பட்டியல்

Harshal-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விரைவில் டி20 உலகக் கோப்பையில் உலகின் நம்பர் ஒன் அணியாக களமிறங்கும் இந்தியா 2007க்குப்பின் கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது. அதற்காக கடந்த வருடமாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோற்காமல் வெற்றி நடைபோட்ட இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அதற்காக துவளாமல் டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் சாய்த்த இந்தியா வெற்றி பாதைக்கு திரும்பினாலும் புவனேஸ்வர் குமார், ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் சுமாராக செயல்படுவது ரசிகர்களுக்கு இன்னும் கவலையை கொடுக்கிறது.

harshal

- Advertisement -

குறிப்பாக இவரில்லாத காரணத்தால் ஆசிய கோப்பையில் தோற்றோம் என்று ரசிகர்கள் நினைத்த ஹர்ஷல் படேல் காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடரில் படுமோசமாக பந்துவீசி ரன்களை வாரி வழங்கினார். அத்துடன் காயமடைவதற்கு முன்பிலிருந்தே ரன்களைக் கொடுத்து வரும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை வழங்கிய பவுலர் என்ற மோசமான உலக சாதனையை படைத்து எதிரணியின் ரன் மெஷினாக செயல்படுகிறார்.

ஆனால் உலக கோப்பைக்கு இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில் பும்ராவுடன் பந்து வீசக்கூடியவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் சுமாராக செயல்படுவதால் கோப்பையை வெல்ல முடியுமா என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு பதில் சிறந்து விளங்கக்கூடிய 4 பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்:

Nattu

3. நடராஜன்: கடந்த 2020 ஐபிஎல் தொடரில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 வகையான இந்திய அணியிலும் அசத்திய இவர் அந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ஆனால் அதன்பின் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் பழைய பன்னீர்செல்வமாக அல்லாமல் சற்று சுமாராக செயல்பட்டதை காரணமாக பயன்படுத்திய தேர்வுக்குழு மறு வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டது. ஆனால் ஹர்ஷல் பட்டேலை விட சுமாராக செயல்படாத அவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவம் கொண்டிருப்பதாலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதாலும் நிச்சயம் உலக கோப்பையில் விளையாட தகுதியானவர்.

Shami

2. முகமது ஷமி: துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பையில் முழுமையாக விளையாடிய இவரை 30 வயதை கடந்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக கழற்றிவிட்ட தேர்வுக்குழு ஹர்ஷல் படேல் போன்ற அடுத்த தலைமுறை பவுலர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முடிவை எடுத்தது. அதில் ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் போன்ற இளம் பவுலர்கள் சொதப்பல் மன்னர்களாக செயல்படும் நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் 20 விக்கெட்டுகளை எடுத்து குஜராத் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றிய இவரை ஆசிய மற்றும் உலக கோப்பையில் தேர்வு செய்ய வேண்டுமென முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

ஆனாலும் விடாப்பிடியாக நிற்கும் தேர்வுக்குழு அவருக்கு ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே வாய்ப்பு கொடுத்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்க தொடரில் முழுமையான வாய்ப்பளித்தது. அதில் துரதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில் வெளியேறிய அவர் நிச்சயம் உலகக்கோப்பையில் விளையாடும் அனுபவமும் திறமையும் தகுதியும் கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.

Deepak-Chahar

1. தீபக் சஹர்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் அடித்த முதல் இந்திய பவுலர், சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் ஆகிய 2 வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ள இவர் பும்ராவுடன் உலக கோப்பையில் விளையாடும் பவுலராக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஐபிஎல் 2022 தொடரில் காயத்தால் வெளியேறிய இவர் அதிலிருந்து குணமடைந்து உலக கோப்பையில் விளையாடும் வேலையை மீண்டும் முதலிலிருந்து தொடங்கினார். அதில் சமீபத்தில் ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கி ஆட்டநாயகன் விருது வென்று கம்பேக் கொடுத்து அசத்தினார்.

ஆனாலும் அவரைக் கண்டு கொள்ளாத தேர்வுக்குழு ஆசிய கோப்பையில் கழற்றி விட்டு உலகக் கோப்பை ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டும் தேர்வு செய்துள்ளது. இருப்பினும் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக கருதப்படும் இவர் கடைசி கட்ட ஓவர்களில் ஹர்ஷல் படேலை போல் அல்லாமல் ஒரு சில போட்டிகளில் தடுமாறினாலும் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்படும் திறமை பெற்றுள்ளார். எனவே ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருப்பதைவிட உலககோப்பை முதன்மை அணியில் பும்ராவுடன் பந்து வீசும் திறமையும் அனுபவமும் இவரிடம் உள்ளது.

Advertisement