ஐபிஎல் 2022 : மெகா ஏலத்தில் கோடிகளுக்கு ஆசைப்படும் 3 ஒர்த் இல்லாத வீரர்கள் – லிஸ்ட் இதோ

Auc
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பங்கேற்கும் 590 வீரர்களை பல கோடிகளை செலவழித்து வாங்க அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டி வாங்க காத்திருக்கின்றனர்.

ipl

- Advertisement -

இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் போன்ற சில இந்திய வீரர்களும் டேவிட் வார்னர் போன்ற வெளிநாட்டு வீரர்களும் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல நடந்து முடிந்துள்ள ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை 2022 தொடரில் அசத்திய இளம் வீரர்கள் இந்த ஏலத்தில் முதல் முறையாக நல்ல தொகைக்கு ஒப்பந்தம் ஆவார்கள் எனவும் நம்பப்படுகிறது.

தகுதியில்லா 3 வீரர்கள்:
இந்த மெகா ஏலத்தில் அதிகபட்ச விலையாக 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, 50 லட்சம், 20 லட்சம் என 5 வகையான பிரிவுகளில் அனைத்து வீரர்களும் பங்கேற்க உள்ளார்கள். இதில் ரவிசந்திரன் அஸ்வின், டேவிட் வார்னர், ஷிகர் தவான் போன்ற நட்சத்திர வீரர்கள் அதிகபட்ச விலையான 2 கோடிகள் பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.

IPL-bcci

இருப்பினும் ஒருசில அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்கள் சமீப காலங்களாக சிறப்பாக செயல்பட தவறிய காரணத்தால் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போக மாட்டார்கள் என கருதப்படுகிறது. எனவே 20 லட்சம், 50 லட்சம் போன்ற குறைந்த விலை பிரிவுகளின் கீழ் விண்ணப்பம் செய்யாமல் கோடிகளுக்கு ஆசைப்பட்டு அதிகபட்ச ஏலத் தொகை விண்ணப்பம் செய்துள்ள ஒருசில இந்திய வீரர்கள் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. கேதார் ஜாதவ் : தற்போது 36 வயதை கடந்துள்ள இந்திய வீரர் கேதர் ஜாதவ் பற்றி சொல்லவே தேவையில்லை. 2015 உலகக் கோப்பைக்கு பின் இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டதுடன் அவ்வப்போது பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டார். இதனால் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட பெரிய தொகைக்கு ஒப்பந்தம் ஆனார்.

Kedar-Jadhav (1)

இருப்பினும் ஐபிஎல் 2020 தொடரில் இவர் எந்த அளவுக்கு பேட்டிங் செய்தார் என்று சென்னை ரசிகர்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. அதனால் சென்னை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அவர் கடந்த வருடம் ஐதராபாத் அணியில் விளையாடிய போதும் அங்கும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஏற்கனவே இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ள இவர் தற்போது ஐபிஎல் தொடரிலும் சமீப காலங்களாக பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் ஐபிஎல் 2022 தொடரில் அடிப்படை விலையாக 1 கோடிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள இவரை எந்த அணி வாங்கப் போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

2. இஷாந்த் சர்மா (2 கோடி) : இந்திய அணியில் தற்போது அனுபவ வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் இசாந்த் சர்மா ஐபிஎல் துவங்கிய காலகட்டங்களில் தொடர்ச்சியாக 140 கீ.மீ வேகத்தில் எதிரணி பேட்டர்களை திணறடிக்க கூடியவராக இருந்தார். இருப்பினும் சமீப காலங்களாக மிகச் சிறப்பாக பந்து வீச தவறியதால் இந்திய வெள்ளைப் பந்து அணியில் இருந்து காணாமல் போன அவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.

ishanth 2

டெஸ்ட் அணியிலும் கூட கடந்த சில மாதங்களாக நிரந்தர இடத்தை பிடிக்க தடுமாறும் அவர் கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். கடந்த வருடம் ஒருசில போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்த போதிலும் அதில் அவர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் 2022 ஏலத்தில் அவர் அதிகபட்ச அடிப்படை விலையாக 2 கோடிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளது ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஆனால் அவ்வளவு தொகைகள் கொடுத்து வாங்க அனைத்து அணிகளும் யோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. உமேஷ் யாதவ் (2 கோடி): 2010 ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாட துவங்கிய உமேஷ் யாதவ் ஆரம்ப காலகட்டங்களில் அச்சுறுத்தலை அளிக்கும் பந்துவீச்சாளராக விளங்கினார். இதன் காரணமாக கடந்த 2015 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி வந்த இவர் நாளடைவில் ஐபிஎல் தொடரில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறினார்.

Umesh

இதன் காரணமாக இந்திய வெள்ளைப்பந்து அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட அவர் டெஸ்ட் அணியிலும் தொடர்ச்சியான இடத்தை பிடிக்க திண்டாடி வருகிறார். கடந்த 2021இல் இவரை அடிப்படைத் விலையான ஒரு கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது என்றாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட வேளையில் ஐபிஎல் 2022 தொடரில் அடிப்படை விலையாக 2 கோடிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளதால் இவரை ஏலத்தில் ஐபிஎல் அணிகள் வாங்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

Advertisement