ஜெயதேவ் உனட்கட் போல இந்திய கிரிக்கெட்டில் நீண்ட வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த 3 வீரர்களின் பட்டியல்

Unadkat
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்குகிறது. வரும் 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய நிர்பந்தத்தில் விளையாடும் இந்திய அணியில் 12 வருடங்கள் கழித்து யாருமே எதிர்பாராத வகையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதே உனட்கட் தேர்வாகியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 19 வயதில் அறிமுகமான அவர் அறிமுகப் போட்டியில் சுமாராக செயல்பட்ட நிலையில் 2013 – 2018 வரையிலான காலகட்டத்தில் விளையாடிய கணிசமான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சுமாராகவே செயல்பட்டார்.

அதனால் மொத்தமாக கழற்றி விடப்பட்ட அவரின் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் 2019 ரஞ்சிக்கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்து கேப்டனாக முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று காட்டிய அவர் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் தன்னுடைய சௌராஷ்ட்ரா அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்தார். அதனால் 31 வயதில் மீண்டும் தேர்வாகியுள்ள அவர் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்து விடாமுயற்சியுடன் போராடினால் நிச்சயம் வெற்றி காண முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இந்த நிலையில் அவரைப்போல இந்திய கிரிக்கெட்டில் நீண்ட வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த மேலும் சில வீரர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. தினேஷ் கார்த்திக்: 2004இல் இந்தியாவுக்காக அறிமுகமானாலும் அதே காலத்தில் அறிமுகமாகி இந்திய விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றும் அளவுக்கு பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு கேப்டனாக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த தோனி இருந்த காரணத்தால் நிலையான வாய்ப்புகளை பெறாத இவர் கிடைத்த வாய்ப்புகளிலும் ஓரிரு தருணங்களை தவிர பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டார்.

கடைசியாக கடந்த 2019 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த அவர் 2021இல் வர்ணனையாளராக அவதரித்ததால் இந்திய கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனால் தம்மால் டி20 கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் 2022 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் அதிரடியாக செயல்பட்டு 330 ரன்களை 183.33 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அனைவரது பாராட்டுகளைப் பெற்ற அவர் 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் அந்த வாய்ப்பில் இருதரப்பு தொடர்களில் அபாரமாக செயல்பட்ட அவர் முதன்மையான டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதாலும் 37 வயதை தாண்டி விட்டதாலும் இனி இந்தியாவுக்காக விளையாடு வாய்ப்பை பெற மாட்டார் என்று நம்பப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2010இல் விளையாடி பின்னர் 8 வருடங்கள் கழித்து 2018இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா களமிறங்கிய ஒரு டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்த அவர் அதன்பின் தேர்வாகவில்லை.

2. பார்திவ் படேல்: 17 வருடம் 153 நாட்களில் அறிமுகமாகி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் விளையாடிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த இவரும் தோனி எனும் ஜாம்பவான் இருந்ததால் நிலையான வாய்ப்புகளை பெறாததுடன் கிடைத்த வாய்ப்புகளிலும் சுமாராகவே செயல்பட்டார். அந்த வகையில் 2008 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியிருந்த அவருக்கு 2014இல் தோனி ஓய்வு பெற்ற பின் சஹா வந்ததால் மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

இருப்பினும் 2016 இங்கிலாந்து தொடரில் சஹா காயமடைந்ததால் மீண்டும் 8 வருடங்கள் கழித்து வாய்ப்பு பெற்ற பார்த்திவ் பட்டேல் இம்முறை அனுபவத்தால் 42, 62*, 71 போன்ற நல்ல ஸ்கோர்களை எடுத்தார். ஆனால் 2018இல் வந்த ரிஷப் பண்ட் அவரை மட்டுமல்லாமல் சஹாவையும் காலியாக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடித்து விட்டார். அதனால் கடைசியாக 2018இல் விளையாடியிருந்த பார்த்தீவ் பட்டேல் கடந்த வருடம் ஓய்வு பெற்றார்.

1. ராபின் சிங்: ட்ரினிடாடில் பிறந்து தமிழகத்துக்காக விளையாடி 1989இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர் அறிமுகத் தொடரிலேயே சுமாராக செயல்பட்டார். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக போராடிய அவர் கடந்த 1996ஆம் ஆண்டு 7 வருடங்கள் கழித்து 33 வயதில் கம்பேக் கொடுத்தார்.

இதையும் படிங்க: வீடியோ : அடிபட்டு ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்லப்பட்ட இளம் பாக் வீரர் – இலங்கை டி20 தொடரில் சோகம்

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டைட்டன் கோப்பையின் ஒரு முக்கிய போட்டியில் மார்க் வாக் மற்றும் ஸ்டுவர்ட் லா ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய அவர் அடுத்த 5 வருடங்களுக்கு இந்திய அணியில் முக்கிய வீரராக வலம் வந்தார். அப்படியே 136 ஒருநாள் போட்டிகளில் 2336 ரன்களையும் 69 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் மிகச் சிறந்த ஃபீல்டராகவும் ஜொலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement