அடிபட்டு ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்லப்பட்ட இளம் பாக் வீரர் – இலங்கை டி20 தொடரில் சோகம்

- Advertisement -

ஐபிஎல் தொடர் போல இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் எனப்படும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. துவண்டு கிடக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கு தேவையான இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் வகையில் நடைபெறும் இத்தொடரில் நிறைய வெளிநாட்டு வீரர்களும் விளையாடுகிறார்கள். கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரில் இலங்கையின் பிரபல நகரங்களை மையப்படுத்திய 5 அணிகள் கோப்பைக்காக மோதி வருகின்றன. அதில் டிசம்பர் 12ஆம் தேதியன்று பல்லகேல் மைதானத்தில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் கால்லே கிளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி பால்கன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற கால்லே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 153/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தனுக்கா தபாரே 70 (51) ரன்களும் நுவனிடு பெர்னாண்டோ 56 (50) ரன்களும் இமாத் வாசிம் 15* (5) ரன்களும் எடுத்தனர். கண்டி சார்பில் அதிகபட்சமாக கார்லெஸ் பிரத்வெயிட் 3 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 154 ரன்களை துரத்திய அந்த அணி 20 ஓவர்களில் 141/7 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதிகபட்சமாக ஆசின் பண்டாரா 41* (30) ரன்கள் எடுத்த நிலையில் இதர வீரர்கள் அதிரடியாக விளையாடாமல் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.

- Advertisement -

எக்ஸ்ட்ரா பவுன்ஸ்:
அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் கண்டி அணி சேசிங் செய்யும் போது 80/6 என்ற நிலையில் 16வது ஓவரை வீசிய நுவான் பிரதீப் ஒரு பந்தை லெக் சைட் திசையில் மெதுவான வேகத்தில் வீச முயற்சித்தார். ஆனால் அந்தப் பந்து ஒயிடாக மாறியதால் பேட்ஸ்மேன் அடிக்காமல் விட்ட நிலையில் விக்கெட் கீப்பர் அசாம் கான் பிடிப்பதற்காக காத்திருந்தார். ஆனால் பேட்ஸ்மேனை கடந்த பின் தரையில் பிட்ச்சான அந்த பந்து திடீரென்று எதிர்பார்த்ததை விட சற்று அதிகப்படியாக பவுன்ஸாகி அவருடைய தலையில் வலுவாக பட்டது.

பொதுவாகவே பந்து பேட்ஸ்மேனை கடந்து விட்டால் வேகம் குறைந்து வரும். அத்துடன் அந்த சமயத்தில் அந்த பந்து வந்த கோணத்திற்கு ஏற்ப அசாம் கான் சரியாகவே பிடிப்பதற்காக கைகளை கொண்டு வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக திடீரென்று எதிர்பாரா வகையில் சற்று பவுன்ஸான பந்து அவரது தலையை பதம் பார்த்தது. அதனால் காயத்தை சந்தித்த அவர் வலியால் மைதானத்திலேயே படுத்தார். அடுத்த சில நிமிடங்களில் தாங்க முடியாத அளவுக்கு வலியை சந்தித்த அவரை உடனடியாக மருத்துவர்கள் பயிற்சியாளர்களும் இதர வீரர்களும் சோதித்துப் பார்த்தார்கள்.

- Advertisement -

இறுதியில் அதிகப்படியான வலியால் எழுந்து நடக்க முடியாத நிலையை சந்தித்த அவரை வேறு வழியின்றி பலகையில் ஏற்றி மைதானத்திலிருந்து மருத்துவ குழுவினர் தூக்கிச் சென்றார்கள். மேலும் அந்த காயம் பெரிதாக இருப்பதாக தெரிந்ததால் முதலுதவி மட்டுமல்லாமல் நேரடியாக மருத்துவமனைக்கும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அது சோதிக்கப்பட்டதில் அவருக்கு பெரிய அளவில் எந்த காயமும் இல்லை என்று முடிவுகள் வந்ததால் சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் அவர் திரும்பியதாக கண்டி அணி நிர்வாகம் தெரிவித்தது.

முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொயின் கான் அவர்களின் மகனான அவர் காயத்திலிருந்து குணமடைந்து விட்டார் என்பது இலங்கையில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தானில் இருந்த ரசிகர்களையும் ஆறுதலடைய வைத்தது. என்ன தான் உடல் சற்று பருமனாக இருந்தாலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவர் அதே இன்னிங்க்ஸில் ஒரு சில ஓவர்கள் முன்பாக அற்புதமான கேட்ச்சை தாவிப் பிடித்தார்.

இதையும் படிங்க: 6 மாசத்துக்கு முன்னாடி அதை செஞ்ச நீங்க எப்படி டி20 உ.கோ’யில் விட்டீங்க? ரோஹித்தை விளாசும் இயன் மோர்கன்

முன்னதாக இதே தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேட்ச் பிடிக்கும் போது பிரபல இலங்கை வீரர் சமிக்கா கருணரத்னே தவற விட்டு பற்களை இழந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இருப்பினும் அதிலிருந்து அவர் தற்போது குணமடைந்து மீண்டும் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement