6 மாசத்துக்கு முன்னாடி அதை செஞ்ச நீங்க எப்படி டி20 உ.கோ’யில் விட்டீங்க? ரோஹித்தை விளாசும் இயன் மோர்கன்

Eoin morgan Ind
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை துவங்கியுள்ளது. இருப்பினும் அதில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 – 0 (3) என்ற கணக்கில் தோற்ற இந்தியா அடுத்ததாக கத்துக்குட்டி வங்கதேசத்திடம் 2 – 1 (3) என்ற கணக்கில் அவமான தோல்வியை சந்தித்தது. இதனால் கடைசியாக 2013இல் ஒரு ஐசிசி உலக கோப்பையை வென்ற இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் வெல்லுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ENg vs IND Jos Buttler Alex hales

ஏனெனில் 2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி இருதரப்பு தொடர்களில் அசத்தலாக செயல்பட்டாலும் உலகக்கோப்பையை வென்று தரவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையுடன் பதவி விலகினார். அவருக்குப்பின் புதிதாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் அபாரமாக செயல்பட்டு தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறிய இந்தியா 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பையிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் முக்கிய நேரங்களில் சொதப்பி வழக்கமாக தோல்வியடைந்து எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தது.

- Advertisement -

திறமை இருந்தும்:

இத்தனைக்கும் இதர அணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த திறமையான வீரர்களைக் கொண்டிருந்தும் இப்படி அழுத்தமான நேரங்களில் சொதப்புவது தான் ரசிகர்களை வேதனையடைய வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சமீப காலங்களில் முக்கிய போட்டிகளில் முக்கிய வீரர்கள் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்துவதே தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. அவர்களைப் பார்த்து பவுலர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் சரமாரியான அடி வாங்குகிறார்கள். இதனால் இங்கிலாந்து போல அதிரடியான அணுகுமுறையுடன் இந்தியா விளையாட வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் வலுத்து வருகிறது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

இந்நிலையில் தற்போது சாம்பியன் பட்டம் வென்ற இதே இங்கிலாந்து அணியை கடந்த ஜூலை மாதம் அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அடித்து நொறுக்கி 2 – 1 என்ற கணக்கில் வெற்றி கண்ட இந்தியா டி20 உலக கோப்பையில் அதே அதிரடியான அணுகுமுறையை விளையாடவில்லை என்று முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் கூறியுள்ளார். குறிப்பாக திறமை இருந்தும் இந்தியா தடுமாறுவது தமக்கு ஆச்சரியமளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பலமான போட்டியில் நீங்கள் பயமின்றி அதிரடியாக விளையாட வேண்டும். உண்மையை சொல்ல வேண்டுமெனில் அப்போட்டியில் ஆரம்ப முதல் இறுதி வரை இந்தியாவை இங்கிலாந்து அடித்து நொறுக்கியது. அது போன்ற பெரிய போட்டிகளில் நீங்கள் தொடர்ந்து அடிக்க வேண்டும். இங்கிலாந்து அதை கச்சிதமாக செய்தது. குறிப்பாக ஜோஸ் பட்லரின் கேப்டன்ஷிப் நுணுக்கங்கள் மற்றும் முடிவுகள் அபாரமாக இருந்தது. இங்கிலாந்து இந்தியாவை அப்படி ஆட வைத்தது. அவர்கள் இந்தியாவின் கழுத்தை நெரித்தார்கள்”

EoinMorgan

“அதிலிருந்து மீண்டு வருவதற்கு இந்தியாவிடம் பிளான் பி அல்லது பிளான் சி இல்லை என்பது போல் தோன்றியது. இந்தியா ஏன் அப்படி விளையாடத் தேர்ந்தெடுத்தது என்பதைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். முன்னதாக 5 – 6 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ​​ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி மிகவும் சுதந்திரமாக ஆக்ரோசமான மற்றும் நேர்மறையான அணுகு முறையுடன் விளையாடி ஆதிக்கம் செலுத்தியது. அப்போது நாங்கள் ராகுல் டிராவிட் – ரோஹித் சர்மாவைப் பாராட்டினோம். ஆனால் அடிலெய்டில் அது நிச்சயமாகத் தெரியவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:

முன்னதாக விக்கெட் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் என்ன ஆனாலும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுவதாக டி20 உலக கோப்பைக்கு முந்தைய இருதரப்பு தொடர்களின் போது ரோகித் சர்மா தெரிவித்தார். ஆனால் அவரது அதே அதிரடியான அணுகுமுறை டி20 உலக கோப்பையில் இங்கிலாந்திடம் வெறும் 168 ரன்கள் மட்டுமே குவித்து 1 விக்கெட் கூட எடுக்க முடியாத அளவுக்கு திடீரென மாயமானது தான் இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

Advertisement