ரோஹித் மட்டுமல்ல மேலும் 2 வீரர்கள் டெஸ்ட் தொடரில் இருந்து விலகல் – மாற்று வீரர்கள் அறிவிப்பு

rohith
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அண்மையில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றி அசத்திய வேளையில் அடுத்ததாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

IND vs BAN Rohit Sharma Liton Das

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்த ரோகித் சர்மா இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட கட்டை விரல் காயம் காரணமாக மூன்றாவது போட்டியை தவறவிட்டார். அதனை தொடர்ந்து தற்போது மும்பை திரும்பி உள்ள அவர் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு இந்த டெஸ்ட் தொடரிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

எனவே அவர் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து ரோகித் சர்மாவிற்கு பதிலாக துவக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Shami and Jadeja

வரும் டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவை தவிர்த்து மேலும் இரண்டு வீரர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் விலகியுள்ளதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இரட்டை சதம் அடிக்கும் முன்பு நான் விராட் கோலியிடம் சொன்னது இதுதான் – இஷான் கிஷன் வெளிப்படை

இதனால் அவர்களுக்கு பதிலாக நவ்தீப் சைனி மற்றும் சௌரவ் குமார் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரோகித் சர்மா விலகியதன் காரணமாக இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement