இரட்டை சதம் அடிக்கும் முன்பு நான் விராட் கோலியிடம் சொன்னது இதுதான் – இஷான் கிஷன் வெளிப்படை

Ishan Kishan Vs BAN
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ரோகித் சர்மாவிற்கு பதிலாக களம் இறங்கி இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இந்த போட்டியில் துவக்க ஓவர்களில் இருந்தே தனது அதிரடியை காட்டிய இஷான் கிஷன் 24 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 210 ரன்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர், இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய வீரர் என பல்வேறு உலக சாதனையை படைத்தார்.

Ishan-Kishan

- Advertisement -

ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அவர் தனது அதிரடியான ஆட்டத்தை விளையாடியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதே நேரத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலியும் சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில் தான் இரட்டை சதம் அடிப்பதற்கு முன்பாக விராட் கோலியிடம் என்ன பேசினேன் என்பது குறித்து இஷான் கிஷன் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் 95 ரன்களில் இருந்தபோது சிக்ஸர் அடித்து சதம் அடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் விராட் கோலி என்னிடம் வந்து இது உன்னுடைய முதல் சதம் எனவே பொறுமையாக விளையாடி சதத்தை முதலில் உறுதி செய் என்று கூறினார்.

Ishan Kishan 1

அதனை தொடர்ந்து நான் சதத்தை முதலில் பூர்த்தி செய்தேன். பின்னர் 180 ரன்களில் இருந்த போது இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போது விராட் கோலியிடம் சென்று என்னை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் அனைத்து பந்துகளையும் இறங்கி அடிக்க ஆசைப்பட்டு ஆட்டம் அடைந்து விடுவேன் என்று கூறினேன்.

- Advertisement -

அப்போது அவரும் பொறுமையாக இரு எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பவுலரை டார்கெட் செய்ய வேண்டும் என்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எனக்கான சரியான ஆலோசனைகளை எதிர்புறம் இருந்து வழங்கிக் கொண்டே இருந்தார். இப்படி அவரது சிறப்பான ஆலோசனைகள் காரணமாக நான் 200 ரன்களை கடந்தேன்.

இதையும் படிங்க : என்ன பேசுறீங்க, இரட்டை சதம் அடிச்சுட்டா உ.கோ சான்ஸ் கிடைச்சுருமா? நிதர்சனத்துடன் இஷான் கிசான் பேசியது என்ன

பின்பு 300 ரன்கள் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்ததாலே இரட்டை சதம் கடந்த பின்னரும் அடிக்க ஆரம்பித்தேன். இறுதியில் 210 ரன்னுக்கு என்னுடைய இன்னிங்ஸ் முடிந்தது. மீண்டும் இதே போன்று ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் திரும்பவும் என்னுடைய திறனை நிரூபிப்பேன் என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement