ரன் வள்ளல் ஆவேஷ் கானுக்கு பதில் ஆசிய கோப்பையில் இந்தியா தேர்வு செய்திருக்க வேண்டிய 3 பவுலர்கள்

Rohit-and-Avesh
- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15வது முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா தன்னுடைய லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. வரலாற்றில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா மற்ற அணிகளை காட்டிலும் பலமாக இருப்பதால் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

- Advertisement -

ஆனால் அதற்கு பந்துவீச்சு துறையில் 3வது வேகப்பந்து வீச்சாளராக செயல்படும் ஆவேஷ் கான் ரன்களை அள்ளி அள்ளிக் கொடுத்து அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் என்றே கூறலாம். கடந்த பிப்ரவரியில் அறிமுகமான இவர் ஐபிஎல் 2022 தொடரில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் அதன்பின் நடந்த தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ் ஆகிய தொடர்களில் வாய்ப்பை பெற்றார்.

அந்த 2 தொடர்களில் 2 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் அதற்கு ஈடாக 4 -5 போட்டிகளில் மோசமாக பந்து வீசி ரன்களை வாரி வழங்கினார். அதனால் அப்போதே ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளான அவருக்கு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதால் இந்த ஆசிய கோப்பையில் விளையாடும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்தது.

Avesh-Khan-2

ஆனால் அந்த வாய்ப்பை பொன்னாக மாற்ற வேண்டிய அவர் கொஞ்சமும் முன்னேறாமல் 9, 13 என 2 போட்டிகளிலுமே அசோக் திண்டாவின் அடுத்த வாரிசாக மோசமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும் இதர வீரர்களின் சாமர்த்தியத்தால் இந்தியா தப்பினாலும் இவரைத் தேர்வு செய்தது தவறான முடிவாக மாறியுள்ளது. எனவே இவருக்கு பதிலாக தேர்வு செய்திருக்க வேண்டிய 3 பவுலர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. ஷார்துல் தாகூர்: ரசிகர்களால் லார்ட் தாகூர் என கொண்டாடப்படும் இவர் அவ்வப்போது ரன்களை வாரி வழங்கினாலும் ஆவேஷ் கானை போல் அனைத்து போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கும் பவுலர் கிடையாது. மேலும் ஏற்கனவே எதிரணி பெரிய பார்ட்னர்ஷிப் போடும்போது அதை பலமுறை உடைத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய இவர் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்கும் திறமையும் பெற்றுள்ளார்.

thakur 1

மேலும் கணிசமாக பேட்டிங்கிலும் ரன்களை குவிக்கும் திறமை பெற்றுள்ள இவர் கடைசி 5 டி20 இன்னிங்சில் 22*, 20, 17*, 10, 0 என வெற்றிக்கான முக்கிய ரன்களை எடுத்துள்ளார். இவரும் முழுமையான தரமான பவுலர் கிடையாது என்றாலும் ஆவேஷ் கானை விட நல்ல பவுலராக என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

2. முஹம்மது ஷமி: இந்த ஆசிய கோப்பையில் இவருக்கு பதிலாக ஆவேஷ் கான் தேர்வு செய்யப்பட்டது நிறைய முன்னாள் வீரர்களை கொந்தளிக்க வைத்தது. அந்த அளவுக்கு திறமையும் தரமும் அனுபவமும் கொண்டுள்ள இவர் கடைசியாக கடந்த டி20 உலகக்கோப்பையில் முழுமையாக விளையாடினாலும் அதன்பின் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பை பெறவில்லை.

shami

மேலும் 30 வயதை கடந்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று வெளிப்படையாக சொல்லி இவரை தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. ஆனாலும் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக செயல்பட்டு 20 விக்கெட்டுகளை எடுத்து குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றிய இவர் நிச்சயமாக ஆவேஷ் கானை விட 100% தரமான பவுலர் என்பதில் சந்தேகமில்லை. இப்படி ஆவேஷ் கான் போன்ற பவுலர்கள் சுமாராக செயல்பட்டதால் ஒருவேளை டி20 உலகக் கோப்பைக்கு இவர் ஆச்சரியமாகும் வகையில் கடைசி நேரத்தில் தேர்வாகவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

1. தீபக் சஹர்: இந்த ஆசிய கோப்பைக்கான நேரடி அணியில் இடம் பிடிக்காமல் ரிசர்வ் பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளது வேதனையாகும். ஏனெனில் 2019இல் அறிமுகமாகி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் ஆகிய இரட்டை சாதனைகளை படைத்த இவர் உலகக் கோப்பையில் விளையாடும் ஒரு பவுலராக இருந்தார்.

Deepak-Chahar

ஆனால் விதியின் விளையாட்டால் 2022 ஐபிஎல் தொடருக்கு முன் காயத்தால் வெளியேறிய இவர் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே அற்புதமாக பந்துவீசி ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார். ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட அவேஷ் கான் போன்ற வீரர்கள் அவரது இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

எனவே ஆசிய கோப்பையில் செய்த தவறை மீண்டும் செய்யாமல் இவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்வது சிறந்த முடிவாக இருக்கும். ஏனெனில் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் கணிசமான ரன்களை அதிரடியாக சேர்க்கும் திறமையும் இவர் பெற்றுள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது.

Advertisement