PAK vs NZ : டி20 போட்டியை மிஞ்சிய பரபரப்பான டெஸ்ட், 1 விக்கெட் 15 ரன்னில் பறிபோன வெற்றி – கடைசி வரை வெல்லாத பாகிஸ்தான்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியை போராடி டிரா செய்தது. அந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 449 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு டாம் லாதம் 71, டேவோன் கான்வே 122, கேன் வில்லியம்சன் 26, ஹென்றி நிக்கோலஸ் 26, டாம் ப்ளண்டல் 51 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர்.

ஆனால் 10வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்த டெயில் எண்டர்கள் மாட் ஹென்றி 68* ரன்களும் அஜஸ் படேல் 35 ரன்களும் குவித்து ஆச்சரியப்படுத்தினர். சுமாராக பந்து வீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் அடுத்த களமிறங்கிய அந்த அணி எவ்வளவோ போராடியும் 408 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

- Advertisement -

த்ரில்லர் மேட்ச்:
அப்துல்லா சபிக் 19, ஷான் மசூட் 20, கேப்டன் பாபர் அசாம் 24 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 83 ரன்களும் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அஹமத் 78 ரன்களும் எடுத்த நிலையில் சவுத் ஷாக்கில் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 125* ரன்கள் குவித்தார். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் பட்டேல் மற்றும் இஷ் சோதி தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர் அதைத்தொடர்ந்து 41 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய நியூஸிலாந்து தனது 2வது இன்னிங்ஸை 277/5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக டாம் லாதம் 62, கேன் வில்லியம்சன் 41, டாம் ப்ளன்டல் 74, மைக்கேல் ப்ரெஸ்வெல் 74* என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை எடுத்தனர். இறுதியில் 319 என்ற பெரிய இலக்கை துரத்த துவங்கிய பாகிஸ்தானுக்கு சபிக், ஹம்சா ஆகியோர் அடுத்தடுத்து டாக் அவுட்டானதால் 0/2 என 4வது நாள் முடிவில் ஆரம்பத்திலேயே திண்டாடியது. அந்த நிலையில் இன்றைய கடைசி நாளில் இமாம்-உல்-ஹக் 12, பாபர் அசாம் 27, ஷான் மசூட் 35 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

- Advertisement -

அதனால் 80/5 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியை அடுத்த களமிறங்கிய முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமது தன்னுடைய முழு அனுபவத்தையும் காட்டி நங்கூரத்தை போட்டு வெற்றிக்கு போராடினார். நேரம் செல்ல செல்ல மிகவும் நிதானத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் ரசிகர்களை நிம்மதியடைய வைத்த போது கடைசி வரை பொறுமையாகவே விளையாடிய ஷாக்கில் 32 (146) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் அசத்தலாக செயல்பட்ட சர்பராஸ் அகமது சதமடித்து வெற்றிக்கு போராடியதால் குறைந்தபட்சம் தோல்வியை தவிர்த்த பாகிஸ்தான் வெற்றிக்கு போராடியது. ஆனால் கடைசி ஒரு மணி நேரத்தில் எதிர்புறம் சல்மான் 30, ஹசன் அலி 5 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய நியூசிலாந்து வெற்றிக்கு போராடியது. போதாக்குறைக்கு நங்கூரமாக நின்ற சர்ப்ராஸ் அகமதும் கடைசி நேரத்தில் 118 ரன்கள் அவுட்டானதால் போட்டியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

குறிப்பாக 9 விக்கெட்களை இழந்த பாகிஸ்தானை சிங்கிள் கூட விடக்கூடாது என்ற எண்ணத்துடன் அனைத்து பீல்டர்களையும் உள்வட்டத்திற்குள் கொண்டு வந்து நியூசிலாந்து வெற்றிக்கு போராடிய போதிலும் டெயில் எண்டர்கள் நசீம் ஷா 15* ரன்களும் அபாரர் அஹமத் 7* ரன்களும் எடுத்து விக்கெட்டை விடாமல் அடம் பிடித்தனர். அதற்குள் மாலை 6.30 மணி வந்து விட்டதால் 304/9 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 15 ரன்கள் எடுக்க முடியாமல் நழுவ விட்ட வெற்றியையை நியூசிலாந்து 1 விக்கெட்டை எடுக்க முடியாமல் நழுவி விட்டது.

இதையும் படிங்கஇதுக்கு பேர் தான் கேப்டனா முன்னின்று வழி நடத்துவதா? ஹர்டிக் பாண்டியவிடம் ரசிகர்கள் எழுப்பும் 3 நியாயமான கேள்விகள் இதோ

அப்படி டி20 கிரிக்கெட்டை மிஞ்சிய பரபரப்பை ஏற்படுத்திய இப்போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை ஏற்கனவே இழந்த பாகிஸ்தான் கடைசி வரை லீக் சுற்றில் சொந்த மண்ணில் ஒரு வெற்றியை பதிவு முடியாமல் தலை குனிந்தது. அதே போலவே நடப்பு சாம்பியனாக திகழும் நியூசிலாந்தும் பைனல் வாய்ப்பை ஏற்கனவே நழுவ விட்ட நிலையில் இம்முறை லீக் சுற்றில் ஒரு தொடரை கூட வெல்லவில்லை. இறுதியில் இரு அணிகளும் இத்தொடரின் கோப்பை பகிர்ந்து கொண்டன.

Advertisement