இதுக்கு பேர் தான் கேப்டனா முன்னின்று வழி நடத்துவதா? ஹர்டிக் பாண்டியவிடம் ரசிகர்கள் எழுப்பும் 3 நியாயமான கேள்விகள் இதோ

Hardik Pandya
- Advertisement -

2023 புத்தாண்டில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றாலும் 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர ஜனவரி 7ஆம் தேதியான்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் தான் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகள் துவங்கியுள்ளது.

அதன் முதல் பகுதியாக நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டி20 தொடரில் சொதப்பலாகவே செயல்பட்ட இந்தியாவை சூரியகுமாரும் மழையும் காப்பாற்றி 1 – 0 (3) என்ற கணக்கில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்த நேரத்தில் 2024 டி20 உலக கோப்பையில் கேப்டனாக செயல்படுவார் என்று கருதப்படும் ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான இந்த 2 போட்டிகளிலும் எடுத்த சில முடிவுகளுக்கு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
1. புனேவில் நடைபெற்ற 2வது போட்டியில் உம்ரான் மாலிக், சிவம் மாவி ஆகிய அனுபவமற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுக்கான 8 ஓவர்களில் 101 ரன்கள் கொடுத்தனர். மேலும் அக்சர் படேல் – சஹால் ஆகிய ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள்.

ஆனால் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த நோ-பால்களை வீசி சுமாரான பார்மில் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்திய அர்ஷிதீப் சிங்கை மீண்டும் முக்கியமான 19ஆவது ஓவரை ஏன் வீச வைத்தீர்கள் என்று ஹர்திக் பாண்டியாவிடம் ரசிகர்கள் முதல் கேள்வியை எழுப்புகிறார்கள். ஏனெனில் அப்போட்டியில் 3 முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களை விட 2 ஓவர்களை வீசியிருந்த ஹர்திக் பாண்டியா 13 ரன்கள் மட்டும் கொடுத்து நல்ல பார்மில் இருந்தார்.

- Advertisement -

எனவே கேப்டனாக முன்னின்று டெத் ஓவரில் அவர் அந்த எஞ்சிய 2 ஓவர்களை வீசியிருக்கலாமே என்று ரசிகர்கள் நியாயமான கேள்வி எழுப்புகிறார்கள். மறுபுறம் ஏற்கனவே தடுமாறிய அர்ஷிதீப் மீண்டும் 19வது ஓவரில் 2 நோ-பால்களை வீசி சொதப்பினார். குறிப்பாக அவருடைய 4வது பந்தில் கேட்ச் கொடுத்த சனாக்கா அதிலிருந்து தப்பி 30 ரன்களிலிருந்து இறுதியாக 56* ரன்கள் விளாசி வெற்றியை பறித்தார் .

அத்துடன் நோபால் வீசிய அரஷ்தீப் சிங்க்கு கேப்டனாக ஆதரவு கொடுக்காமல் “அவரை குற்றம் சொல்லவில்லை. ஆனால் நோபால் வீசுவது குற்றம்” என்று போட்டியின் முடிவில் பாண்டியா பழியை இளம் வீரர் மீது போட்டார்.

- Advertisement -

2. இதே போலவே முதல் போட்டியிலும் சிவம் மாவி, உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் ஆகிய முதன்மை வேகப்பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்கள் வீசி முடித்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு 1 ஓவர் எஞ்சியிருந்தது. அப்போது கடைசி ஓவரை வீச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது தாமாக முன் சென்று வீசாத அவர் பொறுப்பை அக்சர் படேல் தலையில் கட்டினார்.

இத்தனைக்கும் அப்போட்டியிலும் வெறும் 3 ஓவர்கள் வீசியிருந்த அவர் 12 ரன்கள் மட்டும் கொடுத்து சிறப்பான ஃபார்மில் இருந்தார். எனவே அந்த சமயத்திலும் ஏன் கடைசி ஓவரை கேப்டனாக முன்னின்று நீங்கள் வீசவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நல்ல வேளையாக பந்து வீச்சில் போராடி இந்தியாவை வெற்றி பெற வைக்காமல் போயிருந்தால் பாண்டியா இந்நேரம் கடுமையான விமர்சனங்களை சந்தித்திருப்பார்.

- Advertisement -

3. அதை விட 3வது போட்டியில் போராடிய அக்சர் படேல், சிவம் மாவி ஆகியோர் கடைசி ஓவரில் அவுட்டானதும் ஒரு பந்து எஞ்சியிருந்த போதே இந்தியா தோற்று விட்டதாக எண்ணிய ஹர்திக் பாண்டியா முன்கூட்டியே எழுந்து இதர வீரர்களுக்கு கை கொடுத்தார். ஆனால் அதே சமயம் இசான் கிசான் போன்ற வீரர்கள் இந்தியா எப்படியாவது ஏதேனும் நோ-பால் மேஜிக்கில் ஜெயிக்குமா என்று கடைசி பந்து வரை காத்திருந்தார்கள்.

இதையும் படிங்கIND vs SL : அதை செய்யாம நீங்க சர்வதேச கிரிக்கெட்டுக்கு விளையாட வந்திருக்க கூடாது – நோ பால் போட்ட அர்ஷ்தீப்பை விளாசிய கம்பீர்

அப்படி கேப்டனாக கடைசி பந்து வரை வெற்றிக்கு போராடும் தன்னம்பிக்கை இல்லாமல் அதிகப்படியான குருட்டு தைரியம், குருட்டு நம்பிக்கை, இதர வீரர்களின் தலையில் பொறுப்பை கட்டி விடுவது போன்ற வேலைகளை செய்யும் நீங்கள் தான் 2024 டி20 உலக கோப்பையில் இந்தியாவை முன்னின்று வழி நடத்த போகிறீர்களா என்று ரசிகர்கள் இப்போதே அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement