2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகிறது – முதல் போட்டி யார் யாருக்கு தெரியுமா?

worldcup
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 13-வது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை இன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. அந்த எட்டு அணிகளில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடங்கும்.

Worldcup

- Advertisement -

அந்த எட்டு அணிகளை தவிர்த்து எஞ்சியுள்ள இரண்டு அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தகுதிசுற்று முடிவடைந்த பிறகு அனைத்து அணிகளும் தங்களது உலகக்கோப்பை தொடருக்கான அணியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவிக்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ள வேளையில் இன்று வெளியாகும் அந்த அறிவிப்பில் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்த உலக கோப்பை தொடரை நடத்த திட்டம் செய்துள்ளதாக தெரிகிறது.

IND vs AUS KL Rahul Jadeja

மேலும் இந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

அதோடு இந்திய அணி மோதும் முதல் போட்டியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அக்டோபர் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் ஆட்டம் பார்க்கப்படுகிறது. அதோடு அக்டோபர் 15-ஆம் தேதி அகமதாபாத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பெரிய போட்டி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : அவரே முன்வந்து ஓய்வு கேட்டதால் தான் அவரை நாங்க வெஸ்ட் இண்டீஸ் டூர்க்கு செலக்ட் பண்ணல – பி.சி.சி.ஐ விளக்கம்

அது தவிர்த்து அரையிறுதி ஆட்டங்கள் நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. மேலும் இறுதிப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள வேளையில் இந்தியா முழுவதும் 10 நகரங்களில் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement