2022 ஐசிசி டி20 தொடரில் கடைசியாக விளையாடுபவர்களாக கருதப்படும் 5 வீரர்களின் பட்டியல்

Dinesh-Karthik
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. பொதுவாகவே தங்களது நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் இதுபோன்ற ஐசிசி உலக கோப்பையை மையப்படுத்தியே தங்களது கேரியரின் விதியை தீர்மானிப்பார்கள். அதாவது சுமாரான பார்மில் தவிக்கும் வீரர்கள் அல்லது மூத்த வயதை எட்டிய வீரர்கள் இதுபோன்ற ஐசிசி உலகக் கோப்பைகளை மையப்படுத்தி தங்களது ஓய்வு முடிவை எடுப்பார்கள்.

Rohit Sharma

- Advertisement -

அந்த வகையில் மூத்த வயதை எட்டிவிட்ட காரணத்தாலும் பார்ம் காரணமாகவும் அடுத்ததாக 2024இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகவே சில நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த உலக கோப்பையில் கடைசியாக விளையாடுகிறார்கள் என்று கருதப்படும் நட்சத்திர வீரர்களைப் பற்றி பார்ப்போம்:

5. முகமத் நபி: ஆப்கானிஸ்தான் அணிக்கு கடந்த பல வருடமாக வெற்றிகளில் பங்காற்றி நம்பிக்கை நட்சத்திர அனுபவம் வாய்ந்த சீனியர் வீரராக உருவெடுத்துள்ள இவர் இந்த உலக கோப்பையில் கேப்டனாக களமிறங்குகிறார். கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானில் எழுச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் 101 போட்டிகளில் 1669 ரன்களை 140.37 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் 83 விக்கெட்களை 7.30 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வருகிறார்.

Mohammad-Nabi

இருப்பினும் தற்போது 37 வயதை கடந்துவிட்ட இவருக்கு அடுத்த உலகக் கோப்பையில் 39 வயதாகிவிடும் என்பதாலும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்து விட்டதாலும் இதுவே கடைசி டி20 உலகக்கோப்பையாக இருக்கலாம்.

- Advertisement -

4. ஆரோன் பின்ச்: அதிரடி தொடக்க வீரராக ஆஸ்திரேலியாவுக்கு முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக பெருமை பெற்றுள்ள இவர் சமீப காலங்களில் ஃபார்மின்றி ரன்களை குவிக்க திண்டாடி வருகிறார். அதனாலேயே ஏற்கனவே 35 வயதிலேயே சமீபத்தில் இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.

finch1

அதேபோல் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ரன்களை குவிக்க தடுமாறும் இவர் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் பாரமாக மாறியுள்ளதால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

3. மார்ட்டின் கப்டில்: நியூசிலாந்தின் மிகச் சிறந்த அதிரடி தொடக்க வீரரான இவர் டி20 கிரிக்கெட்டில் 121 போட்டிகளில் 3497 ரன்களை விளாசி முதல் இடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவுக்கு போட்டியாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இவரும் அதே பழைய பன்னீர்செல்வமாக சமீப காலங்களில் தொடர்ச்சியாக அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

Guptill

மேலும் தற்போது 36 வயதை கடந்துவிட்ட இவருக்கு போட்டியாக ஃபின் ஆலன் போன்ற அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் காத்திருப்பதால் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. ஆனாலும் 2024இல் 38 வயதை கடந்து விடுவார் என்பதால் இதுவே இவருக்கு கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம்.

- Advertisement -

2. ரவிச்சந்திரன் அஸ்வின்: ஒரு கட்டத்தில் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக இருந்து 2017க்குப்பின் மொத்தமாக கழற்றி விடப்பட்ட இவரது டி20 கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனாலும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவருக்கு கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக்கோப்பையில் 4 வருடங்கள் கழித்து நேரடியாக தேர்வாகும் வாய்ப்பு கிடைத்தது.

Ravichandran Ashwin

அதில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையிலும் தேர்வாகியுள்ள அவர் இதுவரை 59 போட்டிகளில் 66 விக்கெட்களை 6.80 என்ற சூப்பரான எக்கனாமியில் எடுத்து வருகிறார். ஆனாலும் 36 வயதைத் தாண்டிவிட்ட இவருக்கு போட்டியாக சஹால், பிஷ்னோய் என நிறைய அடுத்த தலைமுறை ஸ்பின்னர்கள் வந்து விட்டதாலும் 2024இல் 38 வயதை தாண்டி விடுவார் என்பதாலும் இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம்.

1. தினேஷ் கார்த்திக்: கடைசியாக 2019இல் விளையாடி ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்ததால் இவருடைய இந்திய கேரியரும் முடிந்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனாலும் தம்மால் டி20 கிரிக்கெட்டில் விளையாடி உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐபிஎல் 2022 தொடரில் கடினமாக உழைத்து தன்னை மிகச்சிறந்த பினிசர் என்று நிரூபித்த அவர் 3 வருடங்கள் கழித்து அபார கம்பேக் கொடுத்தார்.

Dinesh-Karthik

அதில் இதுவரை பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெற்று வரும் அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் கடைசி முறையாக கடைசி மூச்சாக இந்தியாவுக்கு கோப்பை வெல்ல போராட உள்ளார். ஏனெனில் ஏற்கனவே 37 வயதை கடந்துவிட்ட இவர் அடுத்த உலகக் கோப்பையில் 39 வயதை தாண்டி விடுவார் என்பதுடன் பண்ட், சாம்சன், இஷான் கிஷன் என போட்டிக்கு நிறைய அடுத்த தலைமுறை இளம் விக்கெட் கீப்பர்கள் வந்து விட்டனர்.

Advertisement