முதலில் வரும் 2000 ரசிகர்களுக்கு டிக்கெட் இலவசம் …S.Africa கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பு – காரணம் இதுதான் !

ஆஸ்திரேலியா அணி தென் ஆப்ரிக்கவிற்கு எதிரான டேஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது.ஏற்கனவே தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தொடரில் 2-1 என்று பின்தங்கியுள்ளது.
warner

ஏற்கனவே தென் ஆப்ரிக்கா அணி 2 போட்டியில் த்ரில் வெற்றியை அடைந்துள்ளது. தற்போது போட்டியில் மேலும் த்ரில் கூடியுள்ளது .ஏனெனில் இந்த 4 வது போட்டியில் முதலில் வரும் 2000 ரசிகர்களுக்கு டிக்கெட் இலவசம் என்று அறிவித்துள்ளது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம்.

4 வது போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி தனது 2வது இன்னிங்சில் 523 முன்னிலை ரன் குவித்து டிகிளர் செய்தது.இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணி தற்போதய நிலவரப்படி 88 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்துள்ளது. இதனால் தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றி வாய்ப்பு சற்று வலுவாகியுள்ளது. பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே தென் ஆப்ரிக்கா வெற்றி கனியை பறிக்க வெகு அருகில் உள்ளனர்.
aussies

இந்த உற்சாகத்தை கொண்டாட முதலில் வரும் 2000 ரசிகர்களுக்கு டிக்கெட் முற்றிலும் இலவசம் என்று அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் மேலும் ஆர்வமாக உள்ளனர்.ஏற்கனவே தனது சொந்த மண்ணில் இந்த தொடரில் ஆடி வரும் தென் ஆப்ரிக்காவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் உள்ளது.தற்போது இந்த இலவச டிக்கெட் அறிவிப்பால் தென் ஆப்ரிக்காவிற்கு ரசிகர்களின் ஆதரவு மேலும் அமோகமாக இருக்கும்.