IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 இந்திய வீரர்களுக்கு – அறிமுக வாய்ப்பு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் ஜூலை 12-ஆம் தேதி டோமினிகோ நகரில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி கடும் விமர்சனத்தை சந்தித்தது. அதனை தொடர்ந்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்காக நடைபெற இருக்கும் இந்த முதல் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி வெற்றி பெற முனைப்பு காட்டும் என்று தெரிகிறது.

IND-vs-WI

- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து சீனியர் வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு இந்த தொடரில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த தலைமுறை டெஸ்ட் அணியை பலப்படுத்த இனியும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே புஜரா அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பதால் அவரது இடத்தில் நிச்சயம் ஒரு வீரர் களமிறங்கிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

Ishan Kishan and Gill

அதேபோன்று தொடர்ச்சியாக சொதப்பி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பரத்திற்கு பதிலாக அவரது இடத்திலும் ஒரு வீரர் விளையாடி வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் புஜாராவின் இடத்திற்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ஜெய்ஸ்வால் ஆகிய இருவரில் ஒருவர் அறிமுகமாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதில் கட்டாயம் ஜெய்ஸ்வால் அறிமுக வாய்ப்பை பெறுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

மேலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ் பரத் இதுவரை இந்திய அணிக்காக விளையாடியுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அறிமுக வாய்ப்பை பெறுவார் என்று தெரிகிறது. ஆகையால் ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs WI : ஜெய்ஸ்வாலும் இல்ல.. ருதுராஜ் கெய்க்வாடும் இல்ல.. புஜாராவின் 3 ஆவது இடத்தில் – இறங்கப்போவது இவர்தானாம்

அதே போன்று முகமது ஷமி ஓய்வில் இருப்பதால் சிராஜ் இந்திய அணியை பந்துவீச்சில் வழிநடத்துவார் என்று தெரிகிறது. மேலும் உமேஷ் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக நவ்தீப் சைனியும் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement