IND vs WI : ஜெய்ஸ்வாலும் இல்ல.. ருதுராஜ் கெய்க்வாடும் இல்ல.. புஜாராவின் 3 ஆவது இடத்தில் – இறங்கப்போவது இவர்தானாம்

Pujara
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்ததால் மீண்டும் ஒருமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

Pujara

அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வர இருக்கும் இந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வேளையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் புஜாராவின் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடப்போகும் அந்த பேட்ஸ்மேன் யார்? என்கிற விவாதமே அனைவரது மத்தியிலும் அதிக அளவில் காணப்படுகிறது.

ஏனெனில் இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்றாவது இடத்தில் களமிறங்கி 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அவரது இடத்தை பூர்த்தி செய்யப்போகும் அந்த வீரர் யார்? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

Shubman Gill 1

அனுபவம் வாய்ந்த புஜாராவின் இடத்தை நிரப்புவது அவ்வளவு சுலபம் இல்லை என்பதனால் அந்த இடத்தினை கச்சிதமாக நிரப்பப்போகும் வீரர்களுக்கான தேடலும் இந்திய அணியில் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புஜாராவின் இடத்தை நிரப்ப சுப்மன் கில் தான் சரியானவர் என்ற முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ்-சில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஜெயிஸ்வால் தான் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கினார். இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலும் அவரே துவக்க வீரராக அறிமுகமாவார் என்று தெரிகிறது. அதேபோன்று ஏற்கனவே துவக்க வீரராக விளையாடிவந்த சுப்மன் கில் 3-ஆவது இடத்தில் களமிறக்கி பரிசோதிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க : IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஏற்கனவே இந்திய அணியில் மாயங்க் அகர்வால், கே.எல் ராகுல், ப்ரித்வி ஷா ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடிய போது சுப்மன் கில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் உள்ளதால் அவரே அந்த இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் 3-ஆவது இடத்தில் விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement