ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) அல்லது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர் :
அப்படி இந்த தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்ற நிலை இருந்தது. அவ்வேளையில் இந்திய அணியானது இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது இந்திய அணியின் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு தள்ளியுள்ளது.
இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே சிட்னி நகருக்கு சென்று பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதுகு வலி காரணமாக விலகுவதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அறிவித்திருந்தார். இதன் காரணமாக ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக எந்த வீரர் மாற்று வீரராக களமிறங்குவார்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் ஆகாஷ் தீப் இடத்தினை பிடிக்க இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்த முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா அவரது இடத்தை நிரப்ப வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : 5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் – கவுதம் கம்பீர் அறிவிப்பு
அப்படி அவருக்கு வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் ஏற்கனவே இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடியிருந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது உறுதி.



