ஆமா உங்களுக்கு எதுக்கு ரெஸ்ட்? ராகுல் டிராவிட் பற்றி முன்னாள் கோச் ஓப்பனாக விமர்சித்து பேசியது என்ன

shastri
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. முன்னதாக கடந்த 2017 கேப்டன் – பயிற்சியாளராக செயல்பட்டு வந்த விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோர் இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்டாலும் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் விமர்சனங்களை சந்தித்ததால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையுடன் விலகினர்.

Kohli

- Advertisement -

அந்த ஜோடிக்கு பின் புதிதாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் அவர்களைப் போலவே இரு தரப்பு தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்தியா அழுத்தமான ஆசிய கோப்பையிலும் டி20 உலக கோப்பையிலும் அதே பழைய சொதப்பலை வெளிப்படுத்தியது. இதனால் இவர்களாலும் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை என்பதை ஒரு வருடத்திலேயே தெரிந்து கொண்ட ரசிகர்கள் இந்த புதிய கூட்டணி மீது நிறைய அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடத்தில் எந்த துறைகளையும் விட்டு வைக்காத அவர்கள் ஏகப்பட்ட மாற்றங்களை செய்ததால் பெரும்பாலான இளம் வீரர்களுக்கு நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை.

எதுக்கு ரெஸ்ட்:

அதை விட கேப்டனாக எப்போதும் அணியுடன் இருக்க வேண்டிய ரோஹித் சர்மா முக்கியமற்ற தொடர்களில் ஓய்வெடுத்ததால் ரிஷப் பண்ட், ஷிகர் தவான் உட்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்திய அவலம் ஏற்பட்டது. அது போக விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களும் பணிச்சுமையை நிர்வகிக்க அவ்வப்போது ஓய்வெடுக்கும் நிலையில் உலக கோப்பைக்கு பின் நடைபெறும் நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் சேர்ந்து கொண்டு ஓய்வெடுக்கிறார். அதனால் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடும் போது ஏற்படாத பணிச்சுமை நாட்டுக்காக விளையாடும்போது மட்டும் ஏற்படுகிறதா என்று சீனியர் வீரர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பயிற்சியாளரும் இப்படி செய்வது வேடிக்கையாக உள்ளது.

dravid

இந்நிலையில் வருடத்தில் 2 மாதங்கள் ஐபிஎல் நடைபெறும் போது கிடைக்கும் ஓய்வு போதாதா என்று ராகுல் டிராவிட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரது இடத்தில் விவிஎஸ் லக்ஷ்மன் செயல்படுவதற்கு தகுதியானவர் என்றும் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியதற்கு பின்வருமாறு. “நான் எப்போதும் ஓய்வுகளை நம்ப மாட்டேன். ஏனெனில் நான் என்னுடைய வீரர்களை புரிந்துகொண்டு அணியை கட்டுக்கோப்புடன் நடத்த விரும்புகிறேன். அதற்கு அணியுடன் தொடர்ந்து இருக்க வேண்டும்”

- Advertisement -

“சொல்லப்போனால் பயிற்சியாளராக இருக்கும் உங்களுக்கு எதற்கு ஓய்வு தேவைப்படுகிறது? ஐபிஎல் நடைபெறும் போது 2 – 3 மாதங்கள் இடைவெளி கிடைக்கும் என்பதே பயிற்சியாளர்களுக்கு போதுமான ஓய்வாகும். ஆனால் இதர நேரங்களில் பயிற்சியாளர் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் அவரது இடத்தில் தொடர்வதற்கு லக்ஷ்மன் பொருத்தமானவர். அவரது தலைமையில் வரும் காலங்களில் இளம் வீரர்களை கண்டறிவதே தாரக மந்திரமாக இருக்க வேண்டும். அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் 2 வருடங்கள் இருப்பதால் அதற்குள் பயமின்றி விளையாடும் இளம் வீரர்களை கண்டறியுங்கள். வரும் காலங்களில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாம் அதிரடியாக விளையாடுவதற்கான அணுகுமுறையை உருவாக்குங்கள்”

Shastri

“அதே போல டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்தை பின்பற்றி மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மட்டும் தான் உலகிலேயே 2016க்குப்பின் மிகவும் புதுமையான அணுகு முறையில் வெற்றிகரமாக நடந்து வருகிறார்கள். அவர்களைப் போலவே நாமும் உட்கார்ந்து பேசி 20 ஓவர் அல்லது 50 ஓவர் என வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தேவையான மாற்றத்தை செய்ய வேண்டும். அதற்கு நாம் அதிகப்படியான மாற்றங்களை செய்யாமல் இருக்கும் திறமையை எப்படி பயமின்றி அதிரடியாக விளையாட வைக்க முடியும் என்பதை யோசிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement