ஐபிஎல் வீரர்கள் ஏல வரலாற்றில் முதல் முறை.. 2024 சீசனில் பிசிசிஐ செய்த பிரம்மாண்டம்.. ரசிகர்கள் வரவேற்பு

IPL Coco Cola
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துபாயில் உள்ள கோகோ கோலா ஏரியானாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் அனைத்து 10 அணிகளில் காலியாக உள்ள வெறும் 77 இடங்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 333 வீரர்கள் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.

அதனால் அனைத்து அணிகளும் எந்த வீரர்களை வாங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலம் கொல்கத்தா, மும்பை, சென்னை கொச்சி போன்ற பல்வேறு இந்தியாவைச் சேர்ந்த நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது.

- Advertisement -

வரலாற்றில் முதல் முறை:
இருப்பினும் இம்முறை வெறும் ஒரு நாள் மட்டுமே மினி அளவில் நடக்கும் 2024 சீசன் ஏலம் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக துபாயில் உள்ள மிகவும் பிரம்மாண்டமான கோகோ கோலா ஏரியானாவில் இந்த ஏலத்தை பிசிசிஐ பிரம்மாண்டமாக நடத்துகிறது

அதை விட இம்முறை நடைபெற உள்ள ஏலத்தை ரசிகர்கள் நேரடியாக பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆம் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா 50 ரசிகர்கள் என்ற வீதம் 10 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 500 ரசிகர்கள் 2024 ஐபிஎல் ஏலத்தை நேரடியாக பார்ப்பதற்கான அனுமதியை பிசிசிஐ வழங்கியுள்ளது.

- Advertisement -

2008 முதல் 2023 வரை இதுவரை நடைபெற்ற 16 வருட ஐபிஎல் தொடரின் ஏலத்தில் ஒருமுறை கூட இப்படி ஏலத்தை ரசிகர்கள் நேரடியாக பார்ப்பதற்கான வாய்ப்பை பெறவில்லை. ஆனால் இம்முறை வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் இந்த ஏலத்தை நேரடியாக பார்க்க ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி கொடுத்துள்ளது. குறிப்பாக நேரடி போட்டி நடைபெறுவதை போலவே ஏலம் மையத்தில் நடைபெறும் வகையிலும் அதை சுற்றி 500 ரசிகர்கள் அமர்ந்து ஆரவாரம் செய்து தங்களுடைய அணிக்கு ஆதரவு கொடுக்கும் வகையிலும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டீவ் ஸ்மித்தை யாரும் வாங்க மாட்டாங்க.. அதிகவிலைக்கு ஏலம் போகப்போகும் வீரர் இவர்தான் – டாம் மோடி கணிப்பு

அந்த வகையில் ஐபிஎல் இன்று மிகப்பெரிய விஸ்வரூப வளர்ச்சி காண்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் ரசிகர்களுக்கு முதல் முறையாக அனுமதி கொடுத்துள்ள பிசிசிஐ முடிவு அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஏலத்தை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் மொபைலில் ஜியோ சினிமா சேனல் வாயிலாக நேரடியாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement