ஸ்டீவ் ஸ்மித்தை யாரும் வாங்க மாட்டாங்க.. அதிகவிலைக்கு ஏலம் போகப்போகும் வீரர் இவர்தான் – டாம் மோடி கணிப்பு

Tom-Moody
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கி இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரை சேர்த்து 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு 17-வது சீசனில் கோலாகலமாக அடியெடுத்து வைக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது துபாயில் இன்று டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த அணி? எந்தெந்த வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய வீரர்கள் யார்? எந்தெந்த வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்பட மாட்டார்கள்? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளரான டாம் மூடி இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு போகப்போகும் வீரர் யார்? எந்த அணியாலும் வாங்கப்படாமல் போகப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கருத்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில் : ஸ்டீவ் ஸ்மித்தை எந்த ஒரு அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாது.

- Advertisement -

அதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் அதிக விலைக்கு ஏலம் போவார். குறிப்பாக சாம் கரண் 18 கோடியே 50 லட்சத்திற்கு ஏலம் போனது தான் இதுவரை சாதனையாக உள்ளது. அதையும் தாண்ட மிட்சல் ஸ்டார்க்குக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : பேட்ஸ்மேன்களை அடக்கி பவுலர்கள் சமமாக போட்டியிட.. வரப்போகும் புதிய விதிமுறை.. ரசிகர்கள் மகிழ்ச்சி

அதோடு தமிழக வீரராக ஷாருக் கான் நிச்சயம் சென்னை அணியால் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் அவரது தேர்வுக்கு பல்வேறு அணிகளும் போட்டி போடும் என்றும் கணித்துள்ளார். எது எப்படி இருப்பினும் இன்னும் சில மணி நேரங்களில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியால் வாங்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement