அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி 10 அறிந்திடாத விஷயங்கள்..!

aarjuntendulkar

கிரிக்கெட் உலகில் தற்போது அனைவரின் கண்களும் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் மேல் தான் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான யு 19 தொடரில் ஆடும் 11 பட்டியலில் அர்ஜுனும் இடம்பிடித்தார். தற்போது கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சினின் பெயரை காப்பாற்றியாகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் அர்ஜுன்.

ArjunTendulkar

லிட்டல் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை பற்றி இக்கால தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால் அந்த மாபெரும் ஆலமரத்தின் விழுதான அர்ஜுனை பற்றி கண்டிப்பாக நாம் தெரிந்த கொள்ள வேண்டிய விடயம் பல உள்ளது.

இதோ சச்சினின் மகன், அர்ஜுன் டெண்டுலகர் பற்றி கண்கவர் 10 தகவல்கள்.

1. அர்ஜுன், 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 தேதி பிறந்தார். இவரது 8 வது வயதிலேயே கிரிக்கெட்பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார்.

2. அர்ஜுன் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஆவர், மேலும் இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளரும் கூட. இவர்மணிக்கு 135 கி மீ வேகத்தில் பந்தை எரியும் ஆற்றலை கொண்டவர்.

arjun_tendulkar

3. தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள துருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். மேலும் அந்த பள்ளியில் படிக்கும் போதே யு16 தொடர்களில் விளையாடியுள்ளார்.

4. இவருக்கு சிறு வயது முதலே வேக பந்து வீசுவது தான் மிகவும் பிடிக்குமாம். தனது அபிமான பந்துவீச்சாளர்களா வாசிம் அக்ரம், மிச்சேல் ஸ்டார்ச், மிச்சேல் ஜான்சன் போன்றவர்களை குறிப்பிடுகிறார்.

5. அர்ஜுன் கடத்த மார்ச் மாதம் நடைபெற்ற மும்பை டி20 லீக் தொடரில் பங்கேற்பார் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்க பட்டது. ஆனால், அப்போது அவர் தயாராகாமல் இருந்ததால் அந்த தொடரில்பங்கேற்கவில்லை.
arjun-tendulkar

6. சமீபத்தில் வந்த தகவல்களின்படி அர்ஜுன் தனது பந்து வீச்சை மேலும் சிறப்புமிக்கதாக ஆக்க, தர்மசாலாவில் உள்ள ஒரு பயிற்சி கூடத்தில் தான் பயிற்சி பெற்று வருகிறார்.

7. இந்த சிறு வயதிலேயே அர்ஜுன் , இங்கிலாந்தில் உள்ள சிறப்பு மிக்க மைதானமான லார்ட்ஸில் ஒரு பார்வையாளராக பந்து வீசியுள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு இந்திய மகளீர் அணியிலும் பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. அவருக்கு 15 வயது தான் ஆகிறது, கிரிக்கெட் மீது மிகுந்த பற்று கொண்டவராய் இருக்கிறார். அவரது பிட்னஸ் குறித்து மட்டும் கவனம் செலுத்த கொஞ்சம் அட்வைஸ் செய்துள்ளேன். மற்றபடி சிறப்பாக பந்து வீசுகிறார்.என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் கூட இவரைபுகழ்ந்துள்ளார்.

arjun-tendulkar

9. இந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராண தொடரில் அர்ஜுன் சிறப்பாகவே விளையாடினார், பிராட் மேன் ஓவலில் நடைபெற்ற போட்டியில் 48 ரன்களை அடித்ததுடன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

10. அர்ஜுனுக்கு கிரிக்கெட்டை தாண்டி நீச்சல், கால்பந்து போன்ற போட்டிகளிலும் ஆர்வமாக தான் இருந்தார். ஆனால் கிரிக்கெட் தான் இவரது முன் இருக்கையில் முதல் தேர்வாக அமைந்து விட்டது.