இது நடந்தால் மட்டுமே பெங்களூர் அணி ‘play off’ சுற்றில் நுழைவது சாத்தியம்..!

- Advertisement -

தற்போது நடந்து நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் அனைத்து அணிகளுமே 12 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டது. 12 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று பிலே ஆப் சுற்றிற்கு ஏற்கனவே தகுதியை பெற்று விட்டது. மேலும் சென்னை அணியும் நேற்று பெற்ற வெற்றி மூலம் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுவிட்டது.

bangalore

- Advertisement -

தற்போது 3, 4,5 ஆகிய இடங்களில் இருக்கும் கொல்கத்தா , ராஜஸ்தான் ,பஞ்சாப், ஆகிய அணிகள் 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்றுள்ளது. இந்த மூன்று அணிகளும் பிளே ஆப் சுற்றிற்க்கு நுழையும் சரிக்கு சமமான வாய்ப்பில் இருக்கிறது. மேலும் இந்த 3 அணிகளின் நெட் ரன் விகிதம் -18, -34,-54 என்ற நிலையில் தான் உள்ளது. ஆகவே இந்த 3 அணிகளும் இன்னும் எதிர்கொள்ள உள்ள 2 போட்டிகளிலும் வென்றாக வேண்டும்.

சரி, தற்போது புள்ளிபட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியை எடுத்துக்கொள்வோம். இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆனாலும் இந்த அணியின் நெட் ரன் ரேட் + 0.218 தான் உள்ளது அதனால் , ஒருவேளை இந்த அணி வரப்போகும் 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் பிலே ஆப் சுற்றிற்கு நுழையும் வாய்ப்பு இருக்கும்.

rcb

ஆனால், பெங்களூரு அணி இந்த 2 போட்டிகளில் வென்றால் மட்டும் போதாது இவர்களுக்கு முன்னாள் உள்ள மற்ற 3 அணிகள் இனி பெரும் வெற்றி தோல்வி பொறுத்தே பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றிற்கு நுழையும் வாய்ப்பும் இருக்கிறது. ஆகையால் இன்று நடக்கவிருக்கும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானுக்கு இடையேயான போட்டி இந்த இரு அணிகளுக்கு மட்டும் முக்கியமான போட்டியிள்ள, மற்ற அணிகளும் இந்த போட்டிக்கான முடிவை மிகவும் மும்மரமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும்.

Advertisement