டூபிளெஸ்ஸிஸ் பேச்சை கேட்க மறுத்த ஷர்துள் தாகூர் – ஏன் தெரியுமா ?

- Advertisement -

ஐ.பி.எல் வரலாற்றில் 7 வது முறையாக இறுதிப்போட்டிற்கு தகுதி பெற்றதுதோனி தலைமையிலான சென்னை அணி. ஐ.பி.எல் தொடரின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கம்பீரமாக இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது சென்னை அணி. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் டூ பிளிசி பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

shardulthakur

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் சென்னையின் அணியின் பந்து வீச்சாளர் ஷர்துள் தாகூர் ஹைதராபாத் அணிக்கு ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும் சென்னை அணி பேட்டிங் செய்த போது அனைத்து முக்கிய விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறிய போது, டூ பிலிசியுடன் கை கோர்த்து தான் பந்து வீச்சில் செய்த தவறை ஈடு செய்தார்.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை பெற்றிருந்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி கடகடவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டூ பிளிசி மட்டும் களத்தில் இருந்தார்.

shardulthakur3

18 வைத்து ஓவர் முடியில் 20 ரன்கள் தேவை என்று நிலையில் ஷர்துள் தாகூர் களமிறங்கினர். இவர் டூ பிலிஸிக்கு சிங்கள் கொடுத்து வாய்ப்பளிப்பார் என்று எதிர் பார்த்தால் ,அந்த ஒவேரில் 3 பௌண்டரிகளை விளாசி அனைவரயும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இதன் பின்னர் பேசிய ஷர்துள் தாகூர் “என்னிடம் டூ பிலிசி சிங்கள் அடித்துவிடு என்று கூறினார். ஆனால் நான் பெரிய ஷாட்டுகளை அடிக்க முடிவு செய்தேன். இந்த போட்டி எவ்வளவு முக்கியம் என்று நினைத்தேன். அதனால் என்னால் முடிந்த ரன்களை அடித்து விட்டால் பின்னர் டூ பிளிசி ஆட்டத்தை மடித்து விடுவார் என்று எண்ணினேன். என்னால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்று நான் அடிக்கடி எனது பயிற்சியாளரிடம் கூறுவேன்.” என்று கூறியுள்ளார்.

Advertisement