வலைப்பயிற்சியில் கூட மட்டையில் பந்து படவில்லை.! தினேஷை அசிங்கப்படுத்திய இந்திய வீரர்

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்கபூமியாக திகழும் லார்ட்ஸ் மைதானம் மீண்டும் அதன் தன்மையை நிரூபித்துள்ளது ஆம் லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது ஜோடி இந்திய அணியின் 11 விக்கட்டுகளை சாய்த்தனர் இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய படுதோல்வி அடைந்தது என்றே கூற வேண்டும்.

ganguly

- Advertisement -

இந்நிலையில் தோல்வியை குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் சவ்ரவ் கங்குலி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் இந்திய வீரர்களின் பேட்டிங் இந்த ஆட்டத்தில் மிக மோசமாக இருந்தது மேலும் எதற்காக தவானை தூக்கினார்கள் என்று புரியவில்லை அடுத்த ஆட்டத்தில் அவரை சேர்ப்பார்களா என்று பல கேள்விகளை எழுப்பினார் மேலும் புஜாராவின் ஆட்டமும் மிக மந்தமாக உள்ளதாக கருத்தினை தெரிவித்தார்

அதுபோக தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தையும் அவர் விமர்சித்துள்ளார் அவரால் சரியாக விளையாட முடியவில்லை வலைப்பயிற்சியின் போது கூட அவரது ஆட்டத்தை தான் கவனித்ததாகவும் அப்போது கூட தவனால் பந்தினை சரியாக கனக்ட் செய்யமுடியவில்லை என்று கூறினார் மேலும் தினேஷுக்கு பதிலாக வளர்ந்து வரும் இளம்வீரர் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்கலாம் அவர் இடது கை ஆட்டக்காரர் என்பதாலும் அதுவும் ஒரு பலம் தான் என்று அணிக்கு ஆலோசனை அளித்துள்ளார்.

pant

பேட்ஸ்மேன்கள் ரன்களை அடித்தால் தான் அவர்களிடம் தன்னம்பிக்கை வரும் டெஸ்ட் போட்டி என்பதால் வெறும் தடுப்பட்டதையே ஆடுவது நல்லதல்ல என்று கூறியுள்ளார். கங்குலி தலைமையின் கீழ் இந்திய அணி இருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகளை பதிவு செய்துள்ளது எனவே அவருடைய கருத்தும் நல்லதாக தான் இருக்கும் என்று எண்ணலாம்.ரிஷப் பண்ட் இப்போது சிறந்த பார்மில் உள்ளார் மேலும் 20 வயதே ஆனவர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement