இந்தியா – பாகிஸ்தான் வீரர்களிடையே ஒரு விஷயத்தில் கடும் போட்டி..! இதில் வெல்லப் போவது யார்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

afridi
- Advertisement -

கிரிக்கெட் உலகில் எலியும், பூனையுமாக இருந்து வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எப்போதும் போட்டி நிலவி வருவது தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வருகிறது, இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் யார் டி20 தொடர்களில் அதிக தொடர்களை வென்ற அணியாக விளங்க போகிறார்கள் என்ற கடுமையான போட்டி நிலவி வருகிறது.
pak
சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றுள்ளது. இது இந்திய அணிக்கு 6வது டி20 தொடர் வெற்றியாகும். அதே போல சமீபத்தில் ஆஸ்திரேலிய, பாகிஸ்தான், ஜிம்பாபே அணிகள் மோதிய முத்தரப்பு டி20 தொடரில் வெற்றி பெற்று டி20 தொடரில் தனது 9வது தொடர்ச்சியான வெற்றியை பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.
ind
இந்நிலையில் டி20 தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் இடத்தில உள்ளது. பாகிஸ்தான் அணியை தொடர்ந்து 6 தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ள இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த இரு அணிகளுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த இரு அணிகளும் வரிசையாக வென்று வந்துள்ள டி20 தொடர் பட்டியலை காணலாம்.

பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக வென்ற டி20 தொடர்கள்:-

- Advertisement -

1.இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் (1-0) – 2016

2.மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடர் (3-0) – 2016-17

3.வேர்ல்ட் XI தொடர் (2-3) – 2017-18

- Advertisement -

4.இலங்கைக்கு எதிரான தொடர் (3-0) – 2017-18

5.நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் (2-1) – 2017-18

- Advertisement -

6.மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடர் (3-0) – 2018

7.ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான தொடர் (2-0) – 2018

- Advertisement -

8.ஆஸ்திரேலிய, பாகிஸ்தான், ஜிம்பாபே முத்தரப்பு தொடர் – பாகிஸ்தான் வெற்றி

இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற டி20 தொடர்கள்:-

1. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் (2-1) – 2017-18

2. இலங்கை அணிக்கு எதிரான தொடர் (3-0) – 2017-18

3. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் (2-1) – 2017-18

4. இந்தியா, இலங்கை, வங்கதேசம் (முத்தரப்பு தொடர்) – இந்தியா வெற்றி

5. அயர்லாந்துக்கு எதிரான தொடர் (2-0) – 2018

6. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் (3-1) – 2018

Advertisement