இவரெல்லாம் ஒரு ஆல்ரவுண்டரா..? ஓவர் நைட்டில் யாரும் கபில்தேவ் ஆக முடியாது.! ஹர்பஜன் விளாசல்

- Advertisement -

இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணி மீது அடுக்கு அடுக்காக விமர்சனை சாட்டைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமில்லாது முன்னாள் இந்திய வீரர்கள் கூட இந்திய அணி வீரர்களின் செயல்பாடு மற்றும் அணித்தேர்வு குறித்து பல கருத்துக்களை கூறி வருகின்றனர். சில முன்னாள் வீரர்கள் நேரடியாக இந்திய அணி வீரர்களையும் தோல்விக்கு குற்றம் சாட்டுகின்றனர்.

hardik2

- Advertisement -

பல விமர்சனங்களுக்கு இடையே இப்போது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நேரடியாக ஹார்டிக் பாண்டியவை பற்றிய ஒரு கருத்தினை முன் வைத்து இருக்கிறார். அதில் “ஹார்டிக் பாண்டியவை ஆல்ரவுண்டராக பார்ப்பதை முதலில் நிறுத்துங்கள்” என்று நேரடியாக பாண்டியவை தாக்கி பேசியுள்ளார். பாண்டியா ரெண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெரிய அளவில் பேட்டிங்கிலோ அல்லது பந்து வீச்சிலோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்து வீசுகிறார் பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை அணிக்கு அளிக்கிறார். அதுபோன்று ஸ்டோக்ஸ்க்கு பதிலாக அணியில் இடம்பிடித்த வோக்ஸ் 2வது டெஸ்ட் போட்டியில் சதம் தானும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்து இருக்கிறார். அவர்களை போன்று பாண்டியாவால் தனது அணிக்கு பங்களிப்பை அளிக்க முடியவில்லை. “ஓவர் நைட்டில் யாரும் கபில் தேவ்” ஆக முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

hardik 2

வளர்ந்து வரும் ஹார்டிக் பாண்டியா இன்னும் நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு தனது ஆட்டத்தை மெருகேற்றியே ஆகவேண்டும். இல்லையெனில் இனிவரும் தொடர்களில் அவரது இடம் பறிபோக நிறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement