CSK IPL பணத்தின் மூலம் பிராவோ செய்த செயல்..!

BRAVOCAR

மேற்கிந்திய கிரிக்கெட் அணியில் உள்ள ஆல் ரௌண்டர்களில் பிராவோ ஒரு முக்கிய வீரராக இருப்பவர். வேக பந்து வீச்சாளரான பிராவோ பேட்டிங் மற்றும் பீல்ட்டிங்கில் கூட சிறப்பான ஆட்டக்காரராகவே திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் பிராவோ தனக்கு தானே ஒரு பரிசு ஒன்றை அளித்துக்கொண்டுள்ளார்.

dwanebravo

ஆல்ரவுண்டரரான இந்த கரேபியன் வீரர் இந்தியாவில் நடந்த ஐ பி எல் தொடர்களில் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐ பி எல் போட்டியில் களமிறங்கிய சென்னை அணி, இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் கூட ப்ராவோவின் பெயரை தனது தேர்வு பட்டியலில் சேர்க்க மறக்கவில்லை.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ பி எல் தொடரில் சென்னை அணியால் 6.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த ஐ பி எல் தொடரில் 16 போட்டியில் விளையாடி 14 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இருப்பினும் பல போட்டிகளில் சென்னை அணியின் டெத் ஓவர் நிபுணராக சிறப்பாக பந்து வீசினர். தற்போது கனடாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி 20 தொடரில் விளையாடிவருகிறார் பிராவோ.

bravonewcar

தற்போது ஐ பி எல் போட்டிகளில் சம்பாதித்த பணத்தில் தனக்கென்று ஒரு பரிசை வாங்கியுள்ளார் போலும். சமீபத்தில் பிராவோ ‘முஸ்டாங் 2018’ என்ற சுகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவியுள்ளார். 4951 சி சி செயல் திறன் கொண்ட இந்த காரின் இந்திய ரூபாயின் மதிப்புபடி சுமார் 80 லட்ச ருபாய் இருக்கும்.மேலும், இந்த கார் 250 கி மீ வேகம் வரை செல்லக்கூடிய ஆற்றலை கொண்டது.