சி.எஸ்.கே தொடர் தோல்வி. தோனியின் மகளுக்கு வந்த பாலியல் மிரட்டல் – கொந்தளித்த ரசிகர்கள்

Ziva
- Advertisement -

இந்த காலத்திலும் கூட பிற்போக்குத்தனம், ஆணாதிக்கம் ஆகியவை மீண்டும் உச்சத்தை தொட்டு கொண்டிருக்கின்றன. அந்த காலத்தில்தான் அறிவியல் அறிவு இல்லாமல் மூடநம்பிக்கையில் திளைத்து வந்த மக்கள் ஆணாதிக்கம், மதவெறி இனவெறி போன்றவற்றைக் கொண்டு வன்முறை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். இந்த காலத்திலும் அதன் எச்சங்கள் மிஞ்சி கொண்டுதான் இருக்கிறது.

ipl

- Advertisement -

பிற்போக்குத்தனம் மட்டும் மூடநம்பிக்கையை வளர்க்கும் மக்கள் தங்களுக்கே தெரியாமல் பல தேவையில்லாத செயல்களைச் செய்து வருகிறார்கள். அதன் விளைவாக மனித சமூகம் மீண்டும் பிற்போக்குத் தனத்திற்கு திரும்பிவிடுகிறது. அப்படித்தான் தோனி நன்றாக ஆடாத காரணத்திற்காக தோனியின் 5 வயது குழந்தைக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சரியாக ஆகாமல் இருக்கிறது. மொத்தம் 6 போட்டிகளில் விளையாடிய சி.எஸ்.கே அணி 2 போட்டியில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் குறிப்பாக தோனியின் ஆட்டம் சரியாக அமையவில்லை இது இயல்பாக இருப்பதுதான் ஒரு கிரிக்கெட் வீரருக்கு மோசமான நாட்களும் சில சமயம் அமையும்.

Ziva

இது விளையாட்டு, இப்படி சரியாக ஆடாத விளையாட்டு வீரரின் குடும்பத்திலுள்ள ஒரு குழந்தைக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுப்பது என்ன மாதிரியான கேவலமான செயல் என்று தற்போது வரை தெரியவில்லை.

zivadhoni

யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஐந்து வயது குழந்தையை மன ரீதியாக துன்புறுத்தும் கொடூரர்கள். தோனியின் மகள் ஜீவாவிற்கு கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement